இலவச வேக்சின்.. தனியாருக்கும் கட்டுப்பாடு.. மத்திய அரசின் முடிவால் என்னென்ன பயன்? முழு விபரம்
டெல்லி: உச்ச நீதிமன்றமும், மாநில அரசுகளும் கடுமையாக விமர்சனங்களை வைத்த நிலையில் மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மாற்றியுள்ளது. மத்திய அரசின் புதிய வேக்சின் கொள்கை மக்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்க போகிறது.
இந்தியாவில் கடந்த 6 மாதங்களாக கடும் வேக்சின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோவாக்சின், கோவிட்ஷீல்ட் என்று இரண்டு வேக்சின்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டாலும் மத்திய அரசின் வேக்சின் கொள்கையால் மாநில அரசுகள் கடுமையாக திணறின.
மத்திய அரசு போதுமான வேக்சினை ஆர்டர் செய்ய தவறியதால், மக்களுக்கு உரிய நேரத்தில் வேக்சின் போட முடியவில்லை. மாநில அரசுகளும் சர்வதேச டெண்டர் விட்டு, அதனால் எதுவும் பலன் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தன.

மாற்றம்
இந்த நிலையில்தான் மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மாற்றியுள்ளது. பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று கூறியுள்ளார்.

எப்படி திட்டம்
இந்த திட்டம் குறித்த முழு விபரம் பின்வருமாறு,
இலவச வேக்சின் 18+ வயது கொண்ட எல்லோருக்கும் அளிக்கப்படும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேக்சினில் 75% மத்திய அரசு மூலம் வாங்கப்பட்டு மாநில அரசுகளுக்கு தரப்படும்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேக்சினில் 25% வேக்சினை தனியார் வாங்கிக்கொள்ளும்.
ஜூன் 21 முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும்.
மாநிலங்களுக்கு வேக்சின் விநியோகம் செய்வதன் 100% பணிகளை மத்திய அரசே மேற்கொள்ளும்.

கட்டுப்பாடு
அதோடு இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தனியார் மருத்துவமனைகள் தங்கள் வேக்சின் விற்பனையில் 150 ரூபாய் மட்டுமே சர்வீஸ் சார்ஜ் விதிக்க முடியும். அதாவது வேக்சின் விலையை விட கூடுதலாக 150 ரூபாய் வரை மட்டுமே சர்வீஸ் சார்ஜ் விதிக்க முடியும். மத்திய அரசின் இந்த திட்டம் காரணமாக மக்கள் பல்வேறு பயன்களை அடைவார்கள்.

பயன்
மத்திய அரசின் திட்டத்தால் ஏற்பட போகும் பயன்கள் பின்வருமாறு.
18+ வயது கொண்ட எல்லோருக்கும் இலவச வேக்சின் கிடைக்கும்.
சர்வதேச வேக்சின் டெண்டரை மத்திய அரசு கோரும், வெளிநாடுகளில் இருந்து வேக்சின் கொண்டு வருவது எளிமையாகும்.
அமெரிக்காவை சேர்ந்த பைசர், மாடர்னா போன்ற வேக்சின்கள் வேகமாக இந்தியா வர வாய்ப்புள்ளது.
மாநில அரசுகளுக்கு கூடுதல் விலைக்கு வேக்சின் கொடுத்த சீரம், பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்கள், குறைந்த விலைக்கு மத்திய அரசுக்கு கொடுக்கும் வாய்ப்புள்ளது.
சர்வீஸ் சார்ஜ் கட்டுப்பாட்டால் தனியார் மருத்துவமனையில் கூடுதல் விலைக்கு வேக்சின் விற்க முடியாது.

ஆனால்
ஆனால் அதே சமயம் மாநிலங்களுக்கு எப்படி வேக்சின் பிரித்து கொடுக்கப்படும் என்ற கேள்வியும் உள்ளது. பாகுபாடு இன்றி வேக்சின் தரப்படுமா? பாஜக ஆளாத மாநிலங்களுக்கும் சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications