எதிர்க்கட்சிகளை விடுங்க.. ஒரே நாளில்10 மடங்கு வரை அதிகரித்த ‛சஞ்சார் சாத்தி' செயலி.. புதிய சாதனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சைபர் மோசடியை தடுக்கும் வகையில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் ‛சஞ்சார் சாத்தி' செயலியை கட்டாயமாக இடம்பெற செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த செயலியை பயன்படுத்தி மத்திய அரசு மக்களை உளவு பார்க்க உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று ஒரே நாளில் அந்த செயலியின் தினசரி டவுன்லோட் 60 ஆயிரத்தில் இருந்து 10 மடங்கு உயர்ந்து 6 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த செயலியின் பின்னணி குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

‛சஞ்சார் சாத்தி' என்பது மத்திய அரசின் தொலை தொடர்பு துறையால் ‛சஞ்சார் சாத்தி' உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பயன்படுத்த முடியும்.

from-60-000-to-to-6-lakh-sanchar-saathi-downloads-jump-tenfold-on-tuesday

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலமாக மக்கள் சைபர் பாதுகாப்பை பெற முடியும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

இதற்கிடையே தான் சைபர் பாது​காப்பு காரணங்​களுக்​காக ‛சஞ்​சார் சாத்தி' எனும் செயலியை புதிய செல்போன்​களில் கட்​டா​யம் நிறுவ வேண்​டும் என்று ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​களுக்கு மத்திய அரசு உத்​தர​விட்டது. இதனை ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​கள் நவம்பர் 28ம் தேதி தொடங்கி 90 நாட்​களுக்​குள் உறுதி செய்ய வேண்​டும் என்று தெரிவித்தது. ஆனால் ஆப்பிள் மறுத்துவிட்டது. மற்ற நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகின்றன.

இதற்கிடையே தான் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ‛சஞ்சார் செயலி' மூலமாக மத்திய அரசு மக்களை உளவு பார்க்க முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தெரிவித்து உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மக்கள் புறந்தள்ளி உள்ளனர். ஏனென்றால் நேற்று ஒரே நாளில் ‛சஞ்சார் சாத்தி' செயலியின் டவுன்லோட் கிடுகிடுவென அதிகரித்தது. 10 மடங்கு வரை டவுன்லோட் உயர்ந்துள்ளது.

அதாவது தினமும் இந்த செயலியை டவுன்லோட் செய்வோரின் எண்ணிக்கை வெறும் 60 ஆயிரமாக தான் இருந்தது. ஆனால் நேற்று கிளம்பிய இந்த விவாதத்தால் அந்த செயலியின் டவுன்லோட் 6 லட்சம் என்ற அளவில் உயர்ந்தது. இது புதிய ‛ரெக்கார்ட்' ஆக பதிவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+