உலகமே திணறுது.. விண்டோஸ் முடங்கியதால் அடுத்தடுத்து வெடிக்கும் பிரச்சினைகள்.. எப்போது சரியாகும்!
டெல்லி: இன்றைய தினம் உலகெங்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடங்கி இருக்கும் நிலையில், இதனால் வங்கி, டெலிகாம் தொடங்கி பங்குச்சந்தைகள் வரை பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை மிகப் பெரிதாக உருவெடுத்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா அரசு இது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
இப்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் உலகெங்கும் முடங்கி உள்ளது. இதனால் பல்வேறு செயலிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது தொழில்நுட்பம் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்ட நிலையில், மைக்ரோசாப்ட் திடீரென முடங்கியுள்ளது பல சேவைகளைக் கடுமையாகப் பாதித்து இருக்கிறது.
ஆஸ்திரேலியா அமைச்சரவை கூட்டம்: ஆஸ்திரேலியா நாட்டில் வங்கி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடக சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் அவசர அவசரமாக அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மட்டுமின்றி அமெரிக்கா, சிங்கப்பூர், ரஷ்யா எனப் பல நாடுகளிலும் பல்வேறு சேவைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விமானச் சேவை, சுகாதாரத் துறை, பங்குச் சந்தை, வங்கி செயல்பாடுகள் என பல்வேறு துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.. குறிப்பாக வங்கி சேவை முடங்கி உள்ளதால் பல நாடுகளில் பொதுமக்களால் பணத்தை அனுப்பவும் பெறவும் கூட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவிலும் பாதிப்பு: இந்தியாவிலும் கூட இதன் பாதிப்பு மோசமாகவே இருக்கிறது. நமது நாட்டில் பல்வேறு ஐடி நிறுவனங்களும் மைக்ரோசாப்ட்டின் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் இன்று தங்கள் ஊழியர்களை லாகின் செய்ய வேண்டாம் என்று கேட்டுள்ளன. மேலும், கணினிகளில் குறிப்பிட்ட அந்த க்ரவுட்ஸ்டிரைக் அப்டேட்டை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மற்ற துறைகளைக் காட்டிலும் விமான துறை தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமான துறை தான் முழுக்க முழுக்க நவீனமாகத் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருந்தது. ஆனால், மைக்ரோசாப்ட் முடங்கியதால் அந்த சேவை பாதிக்கப்பட்டுள்ளன. நமது நாட்டில் ஆகாசா, இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ், அலெஜியன்ட் மற்றும் சன்கன்ட்ரி போன்றவற்றின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையங்கள்: டெல்லி விமான நிலையத்தில் விமானச் சேவை தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. விமானப் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக டெல்லி ஏர்போர்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட ஏர்போர்ட்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல பல நாடுகளில் பங்குச்சந்தைகளும் முடங்கியுள்ளன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் PowerBI, மைக்ரோசாஃப்ட் ஃபேப்ரிக், மைக்ரோசாஃப்ட் டீம், மைக்ரோசாஃப்ட் 365, மைக்ரோசாஃப்ட் பர்வியூ, விவா எனப்கேஜ் என பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் இது படிப்படியாக சரியாகும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்: சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேர் Crowdstrike அப்டேட் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று காலை யாரெல்லாம் இந்த அப்பேட்டை செய்தார்கள் அவர்களுக்கே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை சரியாகி வருவதாகவும் விரைவில் முழுமையாகச் சரியாகும் என எதிர்பார்ப்பதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சிக்கலைச் சரி செய்ய முதலில் உங்கள் கணினியை Safe Mode or the Windows Recovery Environmentஇல் ஸ்டார்ட் செய்யவும். அடுத்து அதில் C:\Windows\System32\drivers\CrowdStrike என்று இருப்பதைக் கண்டறிந்து C-00000291*.sys என்ற இருக்கும் கோப்பை கண்டறிந்து அதை டெலிட் செய்ய வேண்டும்.. இப்படிச் செய்துவிட்டு ரீஸ்டார்ட் செய்தால் கணினி வழக்கம் போல ஸ்டார்ட் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications