சிகரெட் டூ சொகுசு கார் வரை... விலை உயரப்போகுது.. 40 சதவீத ஜிஎஸ்டி வரியை தீட்டிய நிர்மலா சீதாராமன்
டெல்லி: சிகரெட் முதல் சொகுசு கார் வரை விலை அதிரடியாக உயரப்போகுது. ஏனென்றால் இதற்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கடந்த சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நாட்டில் ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பரிசு உள்ளதாக கூறினார். இது ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தான் டெல்லியில் இன்று 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது. மத்திய நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி உள்ள இந்த கூட்டம் நாளை வரை நடைபெற்றது. உள்ளது. மாநில நிதியமைச்சர்கள், யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 10 மணிக்கு முடிவடைந்தது.
அதன்பிறகு நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சில பொருட்களுக்கு Sin Tax வகையில் 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
* புகையிலை பொருட்களான பான் மசாலா, குட்கா, சிகரெட், ஜர்தா உள்ளிட்ட சுவிங் புகையிலை பொருட்கள், பீடி Scented புகையிலை பொருட்களுக்கான 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
* அதேபோல் ஆடம்பரமான கார்கள், வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், Dutiable தனிப்பட்ட பயன்பாட்டுக்கான கார் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
* 1200cc க்கும் அதிகமான பெட்ரோல் இன்ஜினக்களின் மற்றும் 1500cc டீசல் இன்ஜின்கள் கொண்ட சொகுசு மற்றும் பிரீமியம் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* சர்க்கரை மற்றும் சுவையூட்டப்பட்ட குளிர்பாகனங்களுக்கானங்கான வரியும் 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.'' என்றார்.
* இந்த புதிய ஜிஎஸ்டி வரி செப்டம்பர் 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications