நிலைமை கைமீறி போகுது.. இந்தியா பாகிஸ்தான் போர்.. நேற்று இரவு முதல் அதிகாலை வரை நடந்தது என்ன?
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையிலான அறிவிக்கப்படாத போர் உச்சம் அடைந்து உள்ளது. அதிலும் நேற்று இரவு முதல் அதிகாலை வரை மிக மோசமான, கட்டுப்படுத்த முடியாத கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. இதனால் நிலைமை கைமீறி சென்று கொண்டு இருக்கிறது. இதில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை நடந்தது என்ன என்று இங்கே பார்க்கலாம்.
1. இரு அண்டை நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீர் முதல் குஜராத் வரை இந்தியாவில் 26 இடங்களில் பாகிஸ்தான் புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதை இந்தியா உடனுக்குடன் தடுத்தது.

2. ஸ்ரீநகர் அருகே 6-7 ட்ரோன்கள் வரை சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஸ்ரீநகரில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை.
3. பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படையினரால் உடனடியாக எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
4. இதையடுத்து இன்று அதிகாலை பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது பாகிஸ்தானின் இருதயம் போன்ற நகரம் ஆகும். அரசியல் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் அரசியலை நிர்ணயிப்பதே லாகூர்தான். லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
5. அதேபோலம் ராவல்பிண்டியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பகுதி பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் இருக்கும் பகுதி ஆகும். பாகிஸ்தானின் மிக முக்கிய ராணுவ தளவாடம் ஆகும். இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும்.
6. பாகிஸ்தானில் உள்ள மூன்று முக்கிய இராணுவ விமானத் தளங்களிலும் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. சியால்கோட் மற்றும் நரோவலில் உள்ள பாகிஸ்தான் நிலைகளிலும் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.
7. இந்தத் தாக்குதல்களில் இந்தியா வானிலிருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
8. இந்தியாவில் Nagastra-1 எனப்படும் "Suicide Drones" உள்ளது. இதைத்தான் இன்று தாக்குதலில் பயன்படுத்தி உள்ளனர். அதேபோல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி உள்ளனர்.
9. பாகிஸ்தானின் ஃபத்தா-1 ஏவுகணையை தடுத்து நிறுத்தியது இந்தியா பாதுகாப்பு படை. முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டது. மேற்குப் பகுதியில் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டது.
10. இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது பற்றிய விவரங்கள் ராணுவ பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை. மேற்குப் பகுதியில் முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை அழிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
11. பாகிஸ்தானில் இருந்து வரும் ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா, Akash Missile System உள்ளிட்ட தடுப்பு அமைப்புகள் முறியடித்தது. ஆனால் என்ன மாதிரியான ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இதில் பயன்படுத்தப்பட்டன என்ற முழு விபரங்கள் வெளியாகவில்லை.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications