ரயில் பயணிகள் வயிற்றில் பாலை வார்த்த ரயில்வே! ஜனவரி முதல் வரும் மெகா மாற்றம்! இனி காசு கரியாகாது!
டெல்லி: இந்தியா முழுவதும் இருக்கும் பயணிகளின் முதல் தேர்வாக ரயில் பயணமே இருக்கிறது. திட்டமிட்ட நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே மக்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே முன் பதிவு செய்த நிலையில், பயண தேதியை மாற்ற வேண்டுமானால், டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு புதிதாக முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நிலையில் ஜனவரி முதல் எந்தவித கட்டணமும் இல்லாமல் ரயில்வேயில் ஆன்லைனில் பயண தேதியை மாற்றம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்.
இந்தியாவின் மிக முக்கிய துறை என்றால் அது ரயில்வே தான். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்து பயணிகளையும் இணைக்கிறது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
நாட்டிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட துறையாக ரயில்வே இருக்கிறது. குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் என்பதால் மக்களின் சிறந்த தேர்வாக ரயில்வே இருக்கிறது. பேசஞ்சர் ரயில்கள் மட்டும் இல்லாது எக்ஸ்பிரஸ் ரயில்கள், வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர் மின்சார ரயில்கள் ஆகியவையும் இந்தியா முழுமையும் இயக்கப்படுகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு
பல நாட்களுக்கு முன்பே ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். மேலும் பயணிகளுக்கு விரைவான அதே நேரத்தில் சிக்கல் இல்லா சேவை வழங்க ரயில்வே புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து ரயில்களுக்கான காத்திருப்பு காலத்தை 120 நாட்களாக ரயில்வே மாற்றி உள்ளது. இதன் மூலம் அனைத்து வகை ரயில்களுக்கும் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய முடியும். இதனால் பயணிகள் குழப்பம் இன்றி பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
ரயில் டிக்கெட் தேதி மாற்றம்
அதை விட மகிழ்ச்சி செய்தியாக ஜனவரி முதல் எந்தவித கட்டணமும் இல்லாமல் ரயில்வேயில் ஆன்லைனில் பயண தேதியை மாற்றம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ். பயணத் திட்டங்கள் எப்போது வேண்டுமானால் எதிர்பாராத முறையில் மாறலாம். உடல்நலப் பிரச்சனை, திடீர் வேலை அல்லது குடும்பச் சூழ்நிலைகள் காரணமாக பயணிகளை முன்பே திட்டமிட்டிருந்த ரயில் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
இந்நிலையில் தான் ஜனவரி மாதம் முதல், பயணிகள் தங்கள் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை ஆன்லைனில் மாற்றலாம், அதுவும் எந்த கட்டணமும் செலுத்தாமல். 2025 ஜனவரி மாதம் முதல் பயணிகள் தங்களின் உறுதியாக உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை ஆன்லைனில் மாற்றிக்கொள்ளலாம். இதற்காக எந்தவித சேவை கட்டணமும் (service charge) வசூலிக்கப்படாது. இப்போதைய முன்பதிவு டிக்கெட் ரத்து முறை பயணிகளுக்கு நியாயமற்றதாக உள்ளது. அதனால் பயணிகளுக்கேற்ப பயணத்தை மாற்ற எளிய முறையில் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்." என்றார்.
ரயில் முன்பதிவு விதிகள்
அதே நேரத்தில், நீங்கள் மாற்றும், புதிய தேதியில் இருக்கை கிடைக்கும் என உறுதியில்லை. அது அன்றைய ரயிலில் இருக்கை நிலைமையைப் பொறுத்தே அமையும். மேலும் புதிய தேதிக்கான டிக்கெட் விலை பழைய டிக்கெட்டைவிட அதிகமாக இருந்தால், பயணிகள் அந்த வித்தியாச தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
ஆன்லைன் தேதி மாற்றம்
தற்போதைய விதிகளின் படி, பயண நேரத்திற்கு 48 மணி முதல் 12 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் கட்டணத்தின் 25% வரை கழிக்கப்படுகிறது. 12 மணி முதல் 4 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் அபராதம் மேலும் அதிகரிக்கும். குறிப்பாக ரிசர்வேஷன் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டால், பணம் திரும்ப கிடைப்பதில்லை. இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், கோடிக்கணக்கான ரயில் பயணிகள் தங்களின் பயணத் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு எளிதாகவும் குறைந்த செலவிலேயே ஏற்பாடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications