Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போருக்கு நடுவே ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் நம் நாட்டுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய், கேஸ் தடைபட்டது. தற்போது இந்தியா கொடியுடன் வரும் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தியில் கடக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் நம் நாட்டில் நிலவும் கேஸ் பற்றாக்குறை உள்பட கச்சா எண்ணெய் சப்ளையில் ஏற்பட்ட பாதிப்பு சரியாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை இந்திய கப்பல்கள் கடப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்த டேட்டாவை இங்கு பார்க்கலாம்.

சவுதி, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளிடம் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் - கேஸ் சப்ளை வருகிறது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி ஈரானுக்கு சொந்தமானது.

from-lpg-gas-to-oil-shortage-how-will-india-gets-benefits-from-iran-after-its-allows-india-ships-vi

தற்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி உள்ளது. இதனால் நம் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாகவும், இந்த வழியாக கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

இதனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியான கப்பல் சேவைகள் பாதிக்கப்பட்டது. உலகளவில் கச்சா எண்ணெய் - கேஸ் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடக்கும். குறிப்பாக இந்தியா, சீனா உள்பட நம்மை சுற்றிய பிற நாடுகளுக்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி கடல்பாதை மிகவும் முக்கியமானதாகும்.

ஏனென்றால் ஈராக், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த வழியாக தான் நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்டவை வரும்.

இந்திய கப்பல்களுக்கு அனுமதி

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை தொடரந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கொடியுடன் செல்லும் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி வழங்கியது.

முதற்கட்டமாக 'புஷ்பக்' மற்றும் 'பரிமல்' ஆகிய இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன தொடரும் போருக்கு நடுவே ஈரானின் இந்த அனுமதி நம் நாட்டுக்கு பெரிய பெரிய குட்நியூஸாக பார்க்கப்படுகிறது.

கேஸ் - கச்சா எண்ணெய்

ஏனென்றால் நம் நாட்டில் கேஸ் தட்டுப்பாடு தொடங்கி விட்டது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லாவிட்டாலும் கூட விரைவில் அதுவும் வர வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் பயந்து போய் இன்று முதல் பெட்ரோல், டீசல் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். இது பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதால் வரும் நாட்களில் கேஸ், கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு இருக்காது. இப்படியான சூழலில் தான் ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் அனுமதிக்கப்படுவதால் கிடைக்கும் பலன்களை இங்கு பார்க்கலாம்.

எல்பிஜி கேஸ் தட்டுப்பாட்டுக்கு தீர்வு

நம் நாட்டில் தற்போது கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தொழிற்சாலைகளுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டு கேஸ் சிலிண்டருக்கான முன்பதிவு 21 நாட்களில் இருந்து 25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டது தான்.

நம் நாட்டின் எல்பிஜி கேஸ் தேவையில் 60 சதவீதம் இறக்குமதி தான் செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியில் 90 சதவீதம் வரை சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் இந்தியாவுக்கு வருகிறது. தற்போது இது பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் நம் நாட்டில் கேஸ் சப்ளையில் அடி விழுந்தது. இப்போது மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி இந்திய கப்பல்களுக்கு திறக்கப்பட்டுள்ளதா்ல வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் எல்பிஜி கேஸ் சப்ளையின் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணப்படும்.

எல்என்ஜி கேஸ் சப்ளை

ஏனென்றால் மத்திய கிழக்கு நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நம் நாட்டுக்கு 50 சதவீத எல்என்ஜி கியாஸ் வரும். இதில் கத்தார் மட்டும் 11.4 மில்லியன் மெட்ரிக் டன் எல்என்ஜி கேஸை ஆண்டுக்கு நம் நாட்டுக்கு தருகிறது. இது 40 சதவீதமாகும். இது தடைப்பட்டு இருந்தது.

இந்த எல்என்ஜி கேஸ் பெரும்பாலும் மின்உற்பத்தி உள்பட பிற தொழில்துறைகளில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. வீடுகளுக்கு குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கியாஸ் சப்ளை வழக்கம்போல் இருக்கும். இதனால் தொழிற்சாலைகளில் பாதிப்பு இருக்காது.

கச்சா எண்ணெய்

அதேபோல் நம் நாடு ரஷ்யா மற்றும் அரபு நாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. நம் நாட்டின் கச்சா எண்ணெய் பயன்பாட்டில் 88 சதவீதம் இறக்குமதி தான் செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியில் ஏறக்குறைய பாதிக்கு பாதி அதாவது 39 முதல் 42 சதவீதம் வரையிலான கச்சா எண்ணெய் ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஹார்முஸ்ஜலசந்தி வழியாக தான் வந்தது. இது தடைப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவுக்கு வர உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் வழக்கம் போல் கிடைக்க வாய்ப்புள்ளது.

உரங்கள்

நம் நாட்டுக்கான தேவையான உரங்களும் இறக்குமதி தான் செய்யப்படுகிறது. நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டும் நைட்ரஜன் உரங்கள் (யூரியா, அமோனியா) 63 சதவீதம் வரையும், டிஏபி உரங்கள் 32 சதவீதம் வரையும் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வருகிறது. அதேபோல் நம் நாட்டின் தேவையில் 42 சதவீத பொட்டாஷ் உரங்கள் சவுதி அரேபியாவிடம் இருந்து வருகிறது. இது தடைப்பட்டதால் விவசாய துறைகள் பாதிக்கும் நிலை வந்தது. தற்போது அது தடுக்கப்படும்.

தொடர்ந்து அனுமதிக்கப்படுமா?

இப்படியான ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் அனுமதிக்கப்பட்டதால் நம் நாடு பலனடைய உள்ளது. இருப்பினும் தொடர்ந்து போர் நிலவி வருவது கப்பல்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் ஈரான் தொடர்ந்து அனுமதிக்குமா? என்பதும் உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் அந்த நாடு அமெரிக்கா, இஸ்ரேலுடன் போரில் சிக்கி உள்ளது. இருப்பினும் ஈரான் தொடர்ந்து இந்திய கப்பல்களை அனுமதிக்க வேண்டும். அப்போது தான் நம் நாட்டுக்கு பலன் கிடைக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+