‛மாலத்தீவு அதிபரும் வருகை’.. ரணில் முதல் ஹசீனா வரை.. மோடி பதவியேற்புக்கு வரும் உலக தலைவர்கள் லிஸ்ட்
டெல்லி: தொடர்ந்து 3வதுமுறையாக இன்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்த விழாவில்நம்மிடம் மோதலில் ஈடுபட்டு வரும் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்பட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விழாவில் பங்கேற்க உள்ள உலக தலைவர்களின் விபரம் வருமாறு:
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. கடந்த 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. தனித்து ஆட்சியை பிடிக்க 272 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும். ஆனால் எந்த கட்சியும் அவ்வளவு இடங்களில் வெற்றி பெறவில்லை.

மாறாக பாஜக தனிப்பெரும் கட்சியாக 240 தொகுதிகளில் வென்றது. கூட்டணி கட்சிகளின் 52 எம்பிக்களின் உதவியுடன் இன்று மீண்டும் மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. மீண்டும் பிரதமரமாக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார்.
கடந்த 2014, 2019 ஆண்டுகளில் அவர் பிரதமராக பதவியேற்று தொடர்ந்து 10 ஆண்டு பணியை நிறைவு செய்தார். இன்று அவர் 3வது முறையாக தொடர்ந்து பிரதமராக பதவியேற்று மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை சமன் செய்ய உள்ளார். இன்றைய தினம் நரேந்திர மோடி இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரதமராக பதவியேற்கிறார்.
ஜனாதிபதி திரெளபதி முர்மு நரேந்திர மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடியின் பிரமாண்ட் கட்அவுட், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பில் பக்கத்து நாட்டின் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகவும், அந்த நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகள் மூலமும் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழை தலைவர்களுக்கு வழங்கினர்.
அதன்படி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சீஷெல்ஸின் துணை அதிபர் அகமது அஃபிஃப் விழாவில் கலந்து கொள்கின்றனர். மேலும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர்புஷ்ப கமல் தஹல், பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே மற்றும் வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்கள் மோடி பதவியேற்பில் பங்கேற்பு
அதுமட்டுமின்றி சமீபகாலமாக இந்தியா- மாலத்தீவு இடையே பிரச்சனை உள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சீனாவுடன் சேர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறார். அங்கிருந்து இந்திய பாதுகாப்பு படையினரை வெளியேற்றினார். ஆனால் இந்தியா தொடர்ந்து மாலத்தீவுக்கு உதவி செய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் விழாவில் பங்கேற்க உள்ளார். இதன்மூலம் இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுதவிர விழாவில் பாஜக முதல்வர்கள், கூட்டணி கட்சிதலைவர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், மடாதிபதிகளுக்கு அழைப்பு என்பது விடுக்கப்பட்டுள்ளது முன்னதாக கடந்த 2014ம் ஆண்டில் முதல் முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். அந்த சமயத்தில் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் விழாவில் பங்கேற்றனர். அதன்பிறகு 2019ம் ஆண்டில் BIMSTEC நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த முறை பிரதமர் மோடி அண்டை நாட்டு தலைவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி தனது பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?!












Click it and Unblock the Notifications