Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அயோத்தி வழக்கில் விலகல்! 74 நாள் மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி! யார் இந்த யுயு லலித்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யுயு லலித் இன்று பதவியேற்று கொண்டார். இவர் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட பெருமையை கொண்டவர். வெறும் 74 நாள் மட்டும் தலைமை நீதிபதியாக செயல்பட உள்ள இவர் அயோத்தி வழக்கு விசாரணை பெஞ்சில் இருந்து விலகினார். இவரது முழுவிபரம் வருமாறு:

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் என் வி ரமணா. இவரது பதவிக்காலம் நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவர் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித்(உதய் உமேஷ் லலித்) இன்று பதவியேற்று கொண்டார். யுயு லலித்துக்கு இன்று டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

74 நாட்கள் மட்டும் பதவி

74 நாட்கள் மட்டும் பதவி

இதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதபதியாக யுயு லலித் பதவியேற்றுள்ளார். இவர் நவம்பர் மாதம் 8 ம் தேதி தனது 65வது வயதில் ஓய்வு பெற உள்ளார். இதனால் யுயு லலித் 74 நாட்கள் மட்டுமே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட உள்ளார். யுயு லலித் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் இந்தியாவை உலுக்கிய 2ஜி அலைக்கற்றை வழக்கில் அரசு வழக்கறிஞராக செயல்பட்டு நீதிபதியாக பணியாற்றி வந்தார். யுயு லலித் பற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு:

மும்பையில் பிறந்த யுயு லலித்

மும்பையில் பிறந்த யுயு லலித்

உச்சநீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக உள்ள யுயு லலித் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1957 நவம்பர் 9ல் பிறந்தார். இவரது தந்தை பெயர் யுஆர் லலித். இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றினார். இதனால் இயல்பாகவே யுயு லலித்துக்கு நீதித்துறைக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. சட்டப்படிப்பை முடித்த யுயு லலித், மும்பை உயர்நீதிமன்றத்தில்1983ல் வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார்.

டெல்லியில் குடிபெயர்ந்து பணி

டெல்லியில் குடிபெயர்ந்து பணி

அதன்பிறகு அடுத்த 3 ஆண்டில் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். 1986ல் டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார். 1986 முதல் 1992 வரையில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சோராப்ஜியுடன் இணைந்து பணியாற்றினார். 2004ல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக அங்கீகாரம் பெற்றார்.

வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி

வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி

அதன்பிறகு 2014 ஆகஸ்ட் 13ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பெரும்பாலும் நீதிபதியாக இருப்பவர்கள் தான் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்படுவார்கள். ஆனால் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டார். இதன்மூலம் வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதபதியாக நியமிக்கப்பட்ட 6வது மூத்த வழக்கறிஞர் என்ற பெருமையை பெற்றார்.

2ஜி வழக்கில் வாதாடிய யுயு லலித்

2ஜி வழக்கில் வாதாடிய யுயு லலித்

முன்னதாக யுயு லலித் வழக்கறிஞராக இருந்தபோது 2011ல் 2ஜி அலைகற்றை ஊழல் வழக்கில் சிபிஐ சார்பில் சிறப்பு வழக்கறிஞராக வாதாடினார். முத்தலாக் விவாகரத்து முறை தொடர்பான வழக்கிலும் இவரது பங்கு உள்ளது. அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை விசாரித்து இவர் தீர்ப்பு வழங்கி உள்ளார். திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசுவாமி கோயிலை நிர்வாகிக்கும் உரிமை, திருவிதாங்கூர் அரச குடும்பத்தினருக்கு உண்டு என்று 2020ல் தீர்ப்பளித்தார்.

அயோத்தி வழக்கில் விலகல்

அயோத்தி வழக்கில் விலகல்

இருப்பினும் அயோத்தி வழக்கு விசாரணையின்போது 2019 ஜனவரியில் தன்னை விடுவித்து கொண்டார். அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் எஸ்ஏ பாப்டே, என்வி ரமணா, யுயு லலித், சந்திரசூட் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வவு முன்பு விசாரணை வந்தது. இந்த பெஞ்சில் இருந்து நீதிபதி லலித் விலகினார். இந்த வழக்கில் முஸ்லிம்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், ‛‛1997ல் இது தொடர்பான வழக்கில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் சார்பில் நீதிபதி லலித் ஆஜரானார்'' என கூறியதை தொடர்ந்து அயோத்தி வழக்கு விசாரணையில் இருந்து விலகினார்.

உச்சநீதிமன்ற நேரம் மாற்ற வாய்ப்பு

உச்சநீதிமன்ற நேரம் மாற்ற வாய்ப்பு


யுயு லலித் உச்சநீதிமன்றத்தின் நேரத்தை மாற்றுவதில் ஆர்வமாக உள்ளார். தற்போது நீதிமன்ற நடைமுறை காலை 10 மணிக்கு துவங்கும் நிலையில் பள்ளி குழந்தைகள் சீக்கிரமாக பள்ளிக்கு செல்லும் வேளையில் நாமும் காலை 9 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்து காலை 9.30 மணிக்கு வழக்கு விசாரணைகளை நீதிமன்றத்தில் விசாரிக்க துவங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். இதனை அவர் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இல்லை.

தேசிய சட்ட சேவை ஆணையம்

தேசிய சட்ட சேவை ஆணையம்

முன்னதாக யுயு லலித் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாக தலைவர் பொறுப்பில் நீதிபதி லலித் ‛‛அனைத்து மாவட்டங்களிலும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசு வழக்கறிஞர்களின் அலுவலகத்தைப் போலவே "சட்ட உதவி" அமைப்பு நிறுவப்படும்'' என கூறினார். இது பெரும் வரவேற்பு பெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+