Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ்.. 2025ல் இந்தியாவில் என்ன நடக்கும் என கணிப்பு! தமிழகத்திற்கும் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர்களில் ஒருவரான குஷால் குமார், அடுத்தாண்டு இந்தியாவில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் கணித்துள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்ட்ராடாமஸ் வரும் காலத்தைத் துல்லியமாகக் கணித்தவர். அதுபோல இந்தியாவின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் இந்த குஷால் குமார் பல முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

நமது நாட்டில் உள்ள பிரபல ஜோதிடர்களில் ஒருவர் குஷால் குமார். இவர் ஏற்கனவே, உக்ரைன் - ரஷ்யா மோதல், இஸ்ரேல்- ஹமாஸ் மோதலை குஷால் துல்லியமாகக் கணித்திருந்தார்.

India offbeat world war

உலகப் போர் இருக்கட்டும்: இதையடுத்து மூன்றாம் உலகப் போர் குறித்த கணிப்புகளை வெளியிட்டார். இருப்பினும், அப்படி எதுவும் நடக்கவில்லை. முதலில் ஜூன் மாதம், பிறகு ஜூலை, அதன் பிறகு ஆகஸ்ட் என்று உலகப் போர் குறித்த இவரது கணிப்புகள் எதுவும் நடக்கவில்லை. அவர் சொன்னது போலப் போர் எதுவும் தொடங்கவில்லை. அதேநேரம் மற்ற மோதல்களைத் துல்லியமாகக் கணித்ததால் இவரது கணிப்புகள் இன்னுமே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா: இதற்கிடையே இவர் 2025ல் இந்தியா எப்படி இருக்கும் என்பது குறித்து சில கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் 2025இன் தொடக்கத்தில் தொழில்துறை வளர்ச்சியில் குமார் மத்திய அரசு, விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்தும் என்று கணித்துள்ளார். மேலும், சோலார் மின்சார உற்பத்தித் துறைக்கும் கவனம் கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் புனல் மின் நிலையம், பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி உள்ள துறைகளில் சில பிரச்சினைகள் ஏற்படும் என அவர் கணித்துள்ளார்.

அடுத்தாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி 2வது வாரத்திற்குள் இந்தியா விண்வெளி துறையில் குறிப்பிடத்தக்கக் கண்டுபிடிப்புகளைச் செய்யும் என்றும் அவர் கணித்துள்ளார். அடுத்து பிப். இரண்டாவது வாரம் முதல் மார்ச் 2025 வரை கண் சார்ந்த பாதிப்பு, காய்ச்சல், இருமல், செரிமான சிக்கல்கள் போன்ற உடல்நலப் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

கவனம்: மேலும், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற கடலோர மாநிலங்களில் வெள்ளம் ஏற்படலாம் என்றும் அவர் கணித்துள்ளார். இந்த மாநிலங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தும் மேக வெடிப்பு சம்பவங்கள் நடக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் பயிர்கள் மற்றும் தானியங்கள் சேதமடைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல்கள்: அடுத்து மார்ச் முதல் மே மாதம் வரை ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரலாம் என்று கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் பெண்கள் மீதான குற்றச் சம்பவங்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் உயர் பதவியில் இருப்போருக்கு எதிராகக் கிளம்பும் என்று அவர் கணித்துள்ளார். அரசியல் ரீதியாகப் பல அதிரடிகள் இந்த காலத்தில் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து ஜூன், ஜூலை மாதங்களில் பாதுகாப்புத் துறையில் நாம் புதிய சாதனைகளைப் படைக்கப் போகிறோம். மேலும், இந்த காலகட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சி துறையிலும் நாம் குறிப்பிடத்தக்க வெற்றியை அடையலாம். அதேபோல மருத்துவத் துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருக்கும். உயிருக்கு ஆபத்தான அல்லது கடுமையான நோய்களுக்குச் சிகிச்சையாக்க ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கப்படலாம் எனக் கூறியுள்ளார். இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பாய்ச்சல்: அடுத்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் விண்வெளி, விவசாயம், வானிலை, மேக வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் அல்லது தீவிர நோய்கள் போன்ற முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத துறைகளில் இந்தியா குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை அடையும். அடுத்து அக்டோபர் 2025இல், சினிமா & டிவி, உணவு மற்றும் விவசாயம், சுத்திகரிக்கப்பட்ட கனிமங்கள் மற்றும் உலோகங்கள், மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட துறைகள் புதிய பாய்ச்சலை அடையும். இந்த துறைகளில் பல புதுமைகள் வரும். அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்.

அடுத்தாண்டு நவம்பரில், கடல் தொடர்பான பிரச்சினைகளுக்குக் கவனம் திரும்பும். இந்த துறையில் அடுத்தாண்டு நவ. மாதம் நமக்குக் குறிப்பிடத்தக்க முதலீடுகள் தேவைப்படலாம். முக்கிய மாற்றங்களும் நடக்கலாம். தொடர்ந்து டிசம்பர் மாதம் மீண்டும் விண்வெளி துறையில் நாம் சாதிக்க வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+