நாளை முதல் பிபிஎஃப் கணக்கிற்கு வட்டி கிடையாதாம்! அக்.1-ல் மொத்தமாக மாறும் விஷயங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: செப்டம்பர் மாதம் இன்றுடன் முடிய போகும் நிலையில் நாளை முதல் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நடைபெறும் என தெரிகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் முதல் செல்வமகள் சேமிப்பு கணக்கில் மாற்றங்கள் உள்ளிட்டவை கொண்டு வரப்படவுள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டரின் விலையை மாற்றி வருகின்றன. அந்த வகையில் அக்டோபர் மாதம் முதல் திருத்தியமைக்கப்படும். அன்றைய தினம் காலை 6 மணி முதல் புதிய விலை அமலுக்கு வரும். வேறு என்னவெல்லாம் மாறுகிறது என்பதை பார்க்கலாம்.

gas cylinder

நீங்கள் எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு வைத்திருந்தீர்கள் என்றால் சில கிரெடிட் கார்டுகள் அவற்றின் லாயல்டி திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அது போல் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் (சுகன்யா சம்ரித்தி திட்டம்) மாற்றம் வருகிறது.

இந்த புதிய விதிகளின் கீழ் சிறுமிகளின் சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மட்டுமே முதல் நாள் முதல் இந்தக் கணக்குகளை இயக்கி வர வேண்டும். புதிய விதிமுறைகளின்படி, ஒரு பெண்ணின் எஸ்எஸ்ஒய் கணக்கை அவரது சட்டப்பூர்வ பாதுகாவலரை தவிர யேறு யாரேனும் திறந்திருந்தால் அந்த கணக்கை சட்டப்பூர்வ பாதுகாவலருக்கு மாற்ற வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும். அது போல் பிபிஎஃப் எனப்படும் தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டத்தில் 3 முக்கிய மாற்றங்கள் வருகின்றன. பல கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கணக்கு வைத்திருப்பவருக்கு 18 வயது நிறைவடையும் வரை தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் வட்டி கிடைக்காது.

அது போல் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஜி, 5 ஜி நெட்வொர்க்குகளின் தரத்தை மேம்படுத்த டிராய் சில மாற்றங்களை செய்யவுள்ளது. ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த புதிய விதிகளை பின்பற்ற வேண்டும்.

இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். பங்குச் சந்தை போனஸ் கடன் தொடர்பான விதிகளை செபி அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. செபி, பங்கு வரவுக்கான நேரத்தை 2 நாட்களாக குறைத்துள்ளது. அது போல் போனஸ் பங்குகள் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து இரு நாட்களுக்குள் வழங்கப்படும்.

வரும் அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் உங்கள் வங்கிப் பணிகளை பாதிக்கும். செப்டம்பர் மாதம் இன்று முடியும் நிலையில் இந்த மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+