பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு.. நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் 137 நாளுக்கு பின் இன்று திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதோடு, வெளிநடப்பு செய்தன.

Recommended Video

    ஒரே நாளில் உயர்ந்த கேஸ், பெட்ரோல், டீசல் விலை.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு?

    நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இன்றும் நாடாளுமன்றத்தில் அவைகள் கூடின.

    அப்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    காங்கிரஸ் எதிர்ப்பு

    காங்கிரஸ் எதிர்ப்பு

    மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளா ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதுதொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அப்போது அவர் ‛‛பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு விலை உயர்வு இருக்கும் என நாங்கள் அச்சம் தெரிவித்து இருந்தோம். தற்போது அது உண்மையாகி உள்ளது. '' என்றார். இதையடுத்து பேச ஓம்பிர்லா மறுப்பு தெரிவித்தார். மேலும் கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசலாம் என்றார்.

    எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

    எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

    இதற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விலை ஏற்றத்தை கண்டித்தும், இந்த விலைய உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் எம்பிக்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கோஷமிட்டனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு குறித்து விவாதிக்க அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

     திமுக எதிர்ப்பு

    திமுக எதிர்ப்பு

    திமுக சார்பில் டிஆர் பாலு கூறுகையில், ‛‛பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற தொடர்ந்து உள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது'' என்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பந்தோபாத்யாய் கூறுகையில், ‛‛டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலைகள் உச்சம் சென்றுள்ளன. இதை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன'' என்றார்.

    விலை உயர்வு எவ்வளவு

    விலை உயர்வு எவ்வளவு

    இந்தியாவில் கடந்த நான்கரை மாதமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து 102.16 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்ந்து 92.19 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.50 உயர்ந்து ரூ.967 க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+