எண்ட் கேம் 7ஆம் கட்ட தேர்தல்..ஓய்கிறது தேர்தல் புயல்! வாரணாசி வரம் கொடுக்குமா? பரபர ப்ளானில் பாஜக..!
டெல்லி: லோக்சபா தேர்தல் 2024 கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் எட்டு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று இருக்கும் நிலையில் இன்னும் ஒரு கட்ட தேர்தல் அதாவது கடைசி கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஜூன் ஒன்றாம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்திய திருநாட்டை அடுத்து ஆளப்போகும் பிரதமர் யார் என்பதை அறிய அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
பாஜகவை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக போகிறார், 400 தொகுதிகளுக்கு மேல் வென்று பாஜக நிச்சயம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கருதப்படும் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் குறிப்பாக கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரச்சாரமானது சூடு பிடித்திருக்கிறது. லோக்சபா தேர்தல் 2024 கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் எட்டு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
மொத்தம் 2105 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. பரிசீலனைக்கு பிறகு 954 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதில் 50 பேர் வாபஸ் பெற்ற நிலையில் மீதம் இருக்கும் வேட்பாளர்கள் தேர்தலை சந்திக்கின்றனர். அதிகபட்சமாக பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகளுக்கு 598 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசத்தில் 13 மக்களவைத் தொகுதிகளில் 495 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. தொகுதி வாரியாக பார்க்கும் போது ஜஹானாபாத் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 73 வேட்புமனுக்களும் பஞ்சாபின் லூதியானாவில் 70 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இப்போதைய நிலவரப்படி பீகார் மாநிலத்தில் எட்டு தொகுதிகளில் 134 வேட்பாளர்களும், சண்டிகரில் ஒரு தொகுதியில் 19 வேட்பாளர்களும், இமாச்சலப் பிரதேசத்தில் நான்கு தொகுதிகளில் 37 வேட்பாளர்களும், ஜார்க்கண்டில் மூன்று தொகுதிகளில் 52 வேட்பாளர்களும் ஒடிசாவில் ஆறு தொகுதிகளில் 66 வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளில் 328 வேட்பாளர்களும், உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகளில் 144 வேட்பாளர்களும் மேற்கு வங்கத்தில் ஒன்பது தொகுதிகளில் 124 வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்றனர்.
இந்த தேர்தலில் நட்சத்திர வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் களமிறங்கி இருக்கிறார். ஏற்கனவே இரண்டு தேர்தல்களில் போட்டியிட்ட அவர் தற்போது மூன்றாவது முறையாக அங்கு போட்டியிடுகிறார். கடந்த 14ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது அங்கு இரண்டு முறை வாகன பேரணி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். மீண்டும் அங்கே அவர் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் பகுஐன் சமாஜ் கட்சி, சுயேட்சை உள்ளிட்ட ஆறு வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். வாரணாசியை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெறுவது உறுதி என்கின்றனர் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications