ஜி 20 உச்சி மாநாடு! டெல்லியிலிருந்து 1000 பிச்சைக்காரர்கள் ஜனவரியில் வெளியேற்றம்! எதிர்க்கும் என்ஜிஓ
டெல்லி: ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி 1000க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளனர். இதற்காக 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடுகள் இல்லாதோர் நலனுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளை கொண்டதுதான் ஜி 20 என்ற அமைப்பாகும்.
இந்த கூட்டமைப்பு பொருளாதாரத்தின் மொத்த உலக உற்பத்தியில் 85 சதவீத பங்கை கொண்டுள்ளது. இந்த அமைப்பு நடத்தும் மாநாட்டில் 20 நாடுகளும் நிதி அமைச்சர்களும், வங்கியின் கவர்னர்களும் கலந்து கொள்வர். உலக பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களை கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியை இந்த அமைப்பு செய்து வருகிறது.

மாநாடு
இந்த அமைப்பின் மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் இதில் உள்ள உறுப்பு நாடுகள் நடத்தும். அதாவது ஆங்கில அகர வரிசைபடி இந்த மாநாடுகளை ஒவ்வொரு உறுப்பு நாடும் நடத்தும். அந்த வகையில் கடைசியாக இந்தோனேசியா நடத்திய நிலையில் இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பு தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நம் இந்தியா இந்த ஜி 20 உச்சி மாநாட்டை நடத்துகிறது.

பெருமைமிகு இந்தியா
இது இந்தியர்களுக்கு பெருமை வாய்ந்த விஷயமாகும். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தையும் கவுரவத்தையும் மரியாதையையும் அளித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் இந்த மாநாட்டை எந்த வித பிரச்சினையும் இன்றி நல்லபடியாக நடத்த மத்திய அரசு விரும்புகிறது. அதற்கான ஆலோசனை கூட்டங்களையும் நடத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு
இந்த மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் டெல்லியில் உச்சி மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே இருக்கும் பிச்சைக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணிகள் நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள ஹனுமன் கோயில் அருகே காஷ்மீரே கேட் ஐஎஸ்பிடி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் வசித்து வருகிறார்கள்.

ஜனவரி மாதம் முதல்
இவர்களை வரும் ஜனவரி மாதம் முதல், இரவு தங்கும் விடுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள நகர தங்குமிட மேம்பாட்டு வாரியத்திடம் நகர நிர்வாகம் பேசியுள்ளது. இதற்காக தலைமை பொறியாளர் தலைமையில் 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பல்வேறு துறையினரின் ஒப்புதலுடன் 1000 பிச்சைக்காரர்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லவுள்ளார்கள். இவர்களில் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்கள் காப்பகத்திற்கும், பெண்களாக இருந்தால் பெண்களுக்கான காப்பகத்திலும், குழந்தை என்றால் குழந்தைகள் நல வாரியத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள்.

எதிர்க்கும் தொண்டு நிறுவனம்
இந்த நிலையில் வீடுகள் இல்லாதோர் நலனுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக பிச்சைக்காரர்களை கட்டாயமாக அரசு அப்புறப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார். கடுங்குளிரிலும் வெயிலிலும் உணவு இல்லாமல் அவதிப்படும் பிச்சைக்காரர்களை அரசு காப்பகத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications