டெல்லியில் ஜி 20 மாநாடு: ஏர்போர்ஸ் விமானத்தில் கெத்தாக வந்து இறங்கிய ஜோ பைடன்!
டெல்லி: ஜி 20 மாநாடு டெல்லியில் நாளை தொடங்க இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏர்போர்ஸ் 1 விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை மத்திய அமைச்சர் வி கே சிங் வரவேற்றார்.
இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 மாநாட்டில் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் ஜி 20 மாநாட்டுக்கு ஒரு நாடு தலைமை வகிக்கும்.

அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தோனேசியா நாடு தலைமை வகித்தது. நடப்பு ஆண்டில் இந்தியா ஜி 20 மாநாட்டுக்கு தலைமை வகிக்கிறது. டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் என ஏராளமான தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கின்றனர். ரஷ்யா சார்பில் புதின் பங்கேற்கவில்லை. புதினுக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கிறார்.

டெல்லிக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள முக்கியமான நட்சத்திர விடுதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தற்போதே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் தலைவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் தங்குகிறார்.
மாநாடு நாளை தொடங்க உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை 6. 55 மணி அளவில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை மத்திய அமைச்சர் வி கே சிங் வரவேற்றார். ஏர்போர்ஸ் 1 என்ற தனி விமானம் மூலம் ஜோ பைடன் வருகை புரிந்தார். ஜோ பேடன் வருகையொட்டி அமெரிக்க அதிபர்கள் பயணிக்கும் தி பீஸ்டு காடில் லாக் காரும் டெல்லி வந்துள்ளது. இந்த காரிலேயே அவர் பயணம் மேற்கொண்டு உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் தங்குகிறார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications