கல்வான்.. பெயர் எப்படி வந்தது தெரியுமா.. ஆச்சரியமூட்டும் வரலாறு.. தாத்தாவின் பெருமை சொல்லும் பேரன்
ஒரு இடத்தை புதிதாக கண்டு பிடித்தால் அந்த இடத்திற்கு பெயர் வைப்பார்கள். அப்படித்தான் இப்போது இந்தியா சீனா எல்லையில் சண்டை நிகழ்ந்த அழகான கல்வான் பள்ளத்தாக்கு பெயர் எப்படி வந்தது பற்றி சுவாரஸ்யமான தகவல்
டெல்லி : இந்தியா சீனா வீரர்கள் இடையே கடந்த வாரம் மோதல் நிகழ்ந்த இடம் கல்வான் பள்ளத்தாக்கு. இந்த மோதலில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்தியா சீனா எல்லைப்பிரச்சினை அரை நூற்றாண்டுகாலமாகவே இருக்கிறது. பங்காளி சண்டை இப்போது பெரும் பகையாக மாறி கனன்று கொண்டிருக்கிறது. அழகான கல்வான் பள்ளத்தாக்கு பெயர் எப்படி வந்தது என்பதே ஒரு சுவாரஸ்யம்தான். இந்த சுவாரஸ்ய தகவலை கூறியிருப்பவர் வேறுயாருமல்ல இந்த இடத்தை கண்டுபிடித்தவரின் பேரன்தான்.
கல்வான் என்றால் காஷ்மீரி மொழியில் கொள்ளைக்காரன் என்றும் சிலரோ குடும்பப் பெயராக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஒரு சிலரோ கல்வான் என்றால் குதிரை பராமரிப்பாளர் என்று சொல்கின்றனர்.
கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள கல்வான் ஆற்றை முதன் முதலாக கண்டறிந்தவர் குலாம் ரசூல் கல்வான் என்பவராம். 1892ஆம் ஆண்டுதான் இந்த இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்கினையும் ஆற்றினையும் பாதையையும் கண்டுபிடித்திருகிறார். இவர் ஒரு சாகசக்காரர் ஆய்வாளரும் கூட.

கல்வான் பெயர் காரணம்
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த குலாம் ரசூல் கல்வான், இங்கிலாந்து, ரஷ்யா மலையேற்ற குழுவினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த பகுதியை சுற்றி காட்டுவாராம். அப்படி ஒருமுறை இந்த பள்ளத்தாக்கு பகுதிகளிலும் மலைப்பகுதிக்கும் வந்தபோதுதான் இந்த ஆறு ஓடுவதை கண்டுபிடித்திருக்கிறார். உள்ளூர்காரரான குலாம் ரசூல் கல்வான் கண்டுபிடித்த ஆற்றுக்கு அவரது பெயரையே வைத்து விட்டார்கள்.

கல்வான் பள்ளத்தாக்கு
எப்போதுமே ஒரு இடத்தை கண்டுபிடித்தால் அந்த இடத்திற்கு ஆங்கிலேயர்களின் பெயர்களைத்தான் வைப்பார்கள். இந்த முறைதான் அதிசயமாக ஆற்றின் பெயருக்கு குலாம் ரசூல் கல்வான் பெயரை வைத்து விட்டார்கள்.

பாதையின் பெயர்
டன்மோர் தலைமையிலான இங்கிலாந்து மலையேற்றக்குழுவினர் பள்ளத்தாக்கில் சிக்கியிருந்த போது குலாம் ரசூல் கல்வான் எளிதாக பாதையை கண்டுபிடித்து அவர்கள் தப்பிக்க உதவினாராம். இதனையடுத்து அந்த பாதைக்கும் ஆற்றுக்கும் கல்வான் நுல்லா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது நடந்தது 1895ஆம் ஆண்டு.

பெருமை கூறும் பேரன் கல்வான்
குலாம் ரசூல் கல்வான் பற்றி சர்வண்ட் ஆஃப் சாஹிப் என்ற பெயரில் புத்தகமே எழுதியிருக்கிறார்களாம். அந்த புத்தகத்தில் குலாம் ரசூல் கல்வான் ரொம்ப நேர்மையானவர் என்று எழுதியிருக்கிறார்களாம். குலாம் ரசூல் கல்வான் பெருமையை அவரது பேரன் முகமது அமீன் கல்வான் பெருமையோடு கூறியிருக்கிறார்.
Recommended Video

1962 எல்லைப்பிரச்சினை போர்
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உயிர்தியாகம் செய்த நமது ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் வைத்துள்ளார் முகமது அமீன் கல்வான். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லைப்பிரச்சினை கடந்த பல ஆண்டுகாலமாகவே நடந்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 1962ஆம் ஆண்டு முதன் முதலாக இதே கல்வான் பகுதியில்தான் நமது ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் போர் நடைபெற்றது. இப்போதும் இதே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்தான் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications