"முதலில் ரேபரேலியில் ஜெயிக்கட்டும்!" வார்த்தையை விட்ட செஸ் ஜாம்பவான் கேரி! மொத்தமாக கிளம்பிய எதிர்ப்பு
டெல்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குறித்து ரஷ்ய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் நாட்களில் 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

ராகுல் காந்தி: இதற்கிடையே காங்கிரஸின் ராகுல் காந்தி லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே தனது செல்போனில் செஸ் விளையாடும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் சமீபத்தில் பகிர்ந்திருந்தது. அதில் இந்தியா அரசியல்வாதிகளிலேயே தான் ஒரு சிறந்த செஸ் வீரர் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். மேலும், பிடித்த செஸ் வீரர் யார் என்ற கேள்விக்கு கேரி காஸ்பரோவை தனக்கு மிகவும் பிடிக்கும் என ராகுல் காந்தி கூறி இருந்தார்.
மேலும், அரசியலும் செஸ் விளையாட்டைப் போலத் தான் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, நாம் சரியாகச் செயல்பட்டால் கொஞ்ச நேரத்திலேயே எதிராளியின் காய்களும் கூட உண்மையில் நமது காய்களை போலவே செயல்படும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை காங்கிரஸ் தொண்டர்கள் உட்பட பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
நெட்டிசன்: அப்போது நெட்டிசன் ஒருவர், "கேரி காஸ்பரோவ், விஸ்வநாத் ஆனந்த் சீக்கிரமே ஓய்வு பெற்றதால் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன். இல்லை என்றால் சம காலத்தின் மிகச் சிறந்த செஸ் வீரரை எதிர்கொள்ள நேரிட்டு இருக்கும்" என்பது போல ராகுல் காந்தியை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார்.
சந்திரயான்-3ஐ நாங்கள் ஏவிட்டோம்.. ராகுல்யானை சோனியாவால் ஏவ முடியவில்லை..! அமித் ஷா நேரடி அட்டாக்!
அதற்கு செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் முதல் நபராக ரிப்ளை கொடுத்திருந்தார். அதில் அவர் மேலே இருப்பவர்களுடன் போட்டியிடும் முன்பு முதலில் ரேபரேலி தொகுதியில் வென்று காட்டுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். இவரும் ராகுல் காந்தி பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் கூட ரேபரேலி தொகுதியில் ராகுல் தான் போட்டியிடுகிறார் என்பதால் இது பேசுபொருள் ஆனது.
விளக்கம்: ராகுல் காந்தி நக்கல் செய்யும் விதமாக பாஜக தரப்பு இந்த ட்வீட்டை இணையத்தில் டிரெண்டாக்கி வந்தனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதாவது தான் சும்மா நகைச்சுவைக்காகச் சொன்னதாகவும் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர், "எனது சிறிய ஜோக்கை இந்திய அரசியலில் உள்ளவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.. ஆனால் சிலர் என்னிடம் கூறியது உண்மையாகிவிட்டது.. அதாவது அனைத்தையும் கண்காணிக்கும் 1000 கண்களை உடைய அரக்கனைப் போல எனது விளையாட்டில் இருந்து அரசியலைப் பிரித்தே பார்க்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், சிலர் இது குறித்துக் கேட்ட போதும் அவர் இதைப் பதிலாக அளித்திருந்தார்.
யார் இவர்: 255 வாரங்கள் தொடர்ச்சியாக செஸ் ரேங்கிங்கில் முதல் இடத்தில் இருந்த காஸ்பரோவ், 1985ஆம் ஆண்டு தனது 22வது வயதில் உலக சாம்பியனாக ஆனது குறிப்பிடத்தக்கது.. இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த்தும் இவரது காலத்தில் செஸ் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications