கிழக்கு இந்தியாவில் மின் துறையில் பெரிய அளவில் முதலீடு! வளர்ச்சிக்கே முன்னுரிமை.. அதானி திட்டவட்டம்
கவுகாத்தி: பீகார் மற்றும் ஜார்க்கண்டில் அதானி குழுமம் மிகப்பெரிய அளவில் மின் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. பிராந்திய வளர்ச்சி மற்றும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான திட்டங்களின் பணிகளை இன்று கவுதம் அதானி நேரில் சென்று ஆய்வு செய்தார். ரூ. 27,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படவுள்ள இந்த திட்டம், அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும்.
ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் மின் திட்டங்களை அதானி குழுமம் மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் பணிகளை கவுதம் அதானி இன்று ஆய்வு செய்தார். வளங்கள் நிறைந்த, ஆனால் வரலாற்று ரீதியாக பின்தங்கிய கிழக்கு இந்தியாவில் அதானி குழுமத்தின் வளர்ந்து வரும் முதலீடுகளை எடுத்துக்காட்டும் வகையில் அதானியின் இந்த விசிட் அமைந்துள்ளது. மின் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை மதிப்பாய்வு செய்தார்.

களப்பணியாளர்களுடன் அதானி
ஜார்கண்டின் பழங்குடி மக்கள் வாழும் கோடா மாவட்டத்தில், ரூ.16,000 கோடிக்கு மேல் முதலீட்டில் அமைந்த 1,600 மெகாவாட் அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையத்தின் செயல்பாடுகளை அதானி ஆய்வு செய்தார். இத்திட்டம் கணிசமான நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளையும், அப்பகுதியில் மேம்பட்ட ரயில் இணைப்பையும் உருவாக்கியுள்ளது. கோடா மின்நிலையம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில், இது நீண்ட கால ஒப்பந்தத்தின் கீழ் வங்கதேசத்திற்கு பிரத்தியேகமாக மின்சாரம் வழங்குகிறது. இது இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இந்த வசதியை முக்கிய எரிசக்தி ஏற்றுமதி மையமாக நிலைநிறுத்துகிறது. தனது ஆய்வின்போது, மின் நிலைய பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் களப்பணியாளர்களுடன் அதானி கலந்துரையாடினார்.
ரூ. 27,000 கோடிக்கு மேல் முதலீடு
அப்போது அங்கு, பழங்குடி சமூகப் பெண்களையும் சந்தித்தார். இது உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் சமூக ஈடுபாட்டிற்கு அதானி குழுமம் அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதானி குழுமம் பீகாரில், பகல்பூருக்கு அருகில் உள்ள பிர்பைண்டியில் 2,400 மெகாவாட் அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிக்கல் மின் திட்டத்தை திட்டமிடுகிறது.
ரூ. 27,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படவுள்ள இந்த திட்டம், அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும். மாநிலத்தின் தொழில்மயமாக்கல் மற்றும் நகர்ப்புற மின் தேவையை பூர்த்தி செய்வதே இதன் நோக்கம். கனிம வளங்கள் நிறைந்திருந்தும், பாரம்பரியமாக பெரிய தொழில்துறை முதலீடுகளைக் குறைவாகக் கண்ட ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில், அதானி குழுமம் மிகப்பெரிய தனியார் துறை உள்கட்டமைப்பு முதலீட்டாளர்களில் ஒன்றாக மாறியுள்ளது.
சேவையே ஒரு வகை பக்தி
முன்னதாக, அதானி தியோகரில் உள்ள பாபா பைத்தியநாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார். இந்த கோயிலுக்கு வருகை தந்தது தரிசனம் செய்தது, தனது நீண்ட நாள் மற்றும் தனிப்பட்ட விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாகக் கூறினார். மேலும், "சேவையே ஒரு வகை பக்தி" என்று குறிப்பிட்டு, சேவை மீதான ஒரு நம்பிக்கையை வலியுறுத்தினார்.
கிழக்கு இந்தியாவில் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு திறனை விரிவுபடுத்துவதில் தொடர்ச்சியான கவனத்தை அடிக்கோடிடிட்டு காட்டும் வகையில் அதானியின் இந்த பயணம் அமைந்துள்ளது. பிராந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தி, பாதுகாப்புக்கு இந்த திட்டம் கணிசமாக பங்களிக்கிறது.












Click it and Unblock the Notifications