இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை நாட்டின் முதுகெலும்பாக உருவாக்க வேண்டும் - கௌதம் அதானி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை நாட்டின் முதுகெலும்பாக உருவாக்க வேண்டும் என்று இந்தியாவின் சிறந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்பாளர்களுக்கு கெளதம் அதானி அழைப்பு விடுத்துள்ளார்.

சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அதானி எரிசக்தி மற்றும் தளவாடத் துறைகளில் சுமார் 100 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Gautam Adani Adani healthcare

இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு: கௌதம் அதானியின் பார்வை

நேற்று மும்பையில் நடைபெற்ற SMISS ஆசியா பசிபிக் மாநாட்டில் பேசிய அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, மருத்துவத் துறை மற்றும் தொழில் முனைவோர் இடையே ஒரு வலுவான இணைப்பு வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், இந்தியாவின் சிறந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்பாளர்கள், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் அவர் அழைப்பு விடுத்தார்.

மருத்துவர்கள் நம்பிக்கையின் சின்னங்களாக இருக்கிறார்கள் என்றும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது நம்பிக்கை மற்றும் மனிதநேயத்துடன் தொடர்புடையது என்றும் அதானி குறிப்பிட்டார். "உலகிற்கு நீங்கள் முதுகெலும்பு மருத்துவர்களாக இருக்கலாம். ஆனால் நோயாளிகளுக்கு, நீங்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறீர்கள்" என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "உண்மையான சிகிச்சை அறுவை சிகிச்சையைத் தாண்டியது. சிகிச்சை என்பது நம்பிக்கை. சிகிச்சை என்பது மனிதாபிமானம்" என்று கூறினார். மேலும், தனது தொழில் முனைவோர் பயணத்தை நினைவு கூர்ந்த அதானி, 16 வயதில் மும்பைக்கு ரயிலில் சென்றது, வைரங்களை பட்டை தீட்டியது, முதல் ஒப்பந்தம் பெற்றது மற்றும் தனது சகோதரரின் தொழிற்சாலையை நிர்வகித்தது போன்ற நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். "தொழில் முனைவு ஒரு பெரிய பார்வையுடன் தொடங்குவதில்லை. எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும்போது செயல்படும் தைரியத்துடன் தொடங்குகிறது" என்று அவர் கூறினார்.

முந்த்ராவில் இருந்த தரிசு நிலங்களை மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டமாக மாற்றியதை அவர் எடுத்துரைத்தார். இது இந்தியாவின் பெரிய பல சரக்கு துறைமுகம், உலகின் மிகப்பெரிய தனியார் அனல் மின் நிலையம் மற்றும் சூரிய ஒளி, பெட்ரோ கெமிக்கல் மற்றும் தளவாடங்களின் மையமாக மாறியுள்ளது.

முதுகெலும்பு வலி: ஒரு தேசிய பிரச்சனை

வணிக உலகில் இருந்து பொது சுகாதாரத்திற்கு மாறிய அதானி, முதுகுவலி இந்தியாவில் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சனையாக உள்ளது என்று கூறினார். இது நீரிழிவு மற்றும் இதய நோயை விட அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூத்த குடிமக்கள் இருவரில் ஒருவர் முதுகுவலி பிரச்சனையை எதிர்கொள்கிறார். "இது ஒரு சுகாதாரப் பிரச்சனை மட்டுமல்ல - இது ஒரு தேசிய நெருக்கடி. இந்தியாவின் மக்கள் நிற்க முடியாவிட்டால் இந்தியா எழ முடியாது," என்று அவர் கூறினார்.

அதானி, இந்தியாவின் மருத்துவ சமூகத்திற்கு ஒரு சவாலை முன்வைத்தார். முதுகுத்தண்டு சிதைவைத் தடுக்கும் AI கருவிகளை உருவாக்கவும், கிராமப்புறங்களுக்கான குறைந்த விலை அறுவை சிகிச்சை கூடங்களை உருவாக்கவும், ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் உயிரியக்கவியல் உள்வைப்புகளுடன் கூடிய மருத்துவமனைகளை வடிவமைக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தை பார்க்கும்போது, ​​எரிசக்தி, தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். "நாங்கள் 1.4 பில்லியன் கனவுகளை சுமந்து செல்லும் முதுகெலும்பை உருவாக்குகிறோம். இந்தியாவின் எழுச்சி தவிர்க்க முடியாதது என்று உலகிற்குச் சொல்லும் முதுகெலும்பு இது," என்றார்.

அதானி ஹெல்த்கேர்: ஒரு புதிய அணுகுமுறை

சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக கடந்த 2022 இல் ரூ .60,000 கோடி அளவுக்கு ஒதுக்கீடு செய்ததை அதானி நினைவு கூறினார். "நாங்கள் சுகாதாரத்திற்குள் நுழைந்ததற்குக் காரணம் அதற்கு வேகம் இல்லை என்பதற்காக அல்ல. வேகம் போதுமானதாக இல்லை என்பதற்காகவே நுழைந்தோம்," என்று அவர் கூறினார்.

அகமதாபாத் மற்றும் மும்பையில் வரவிருக்கும் "அதானி ஹெல்த்கேர் மருத்துவ நிலையங்கள்" 1,000 படுக்கைகள் கொண்ட, ஆராய்ச்சி, நோயாளி பராமரிப்பு, ரோபாட்டிக்ஸ் மற்றும் பயன்பாட்டு கற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வளாகங்களாக இருக்கும்.

அதானி, சுகாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மருத்துவ தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காண விரும்புபவர்கள், முதுகெலும்பு பராமரிப்பில் புரட்சியை உருவாக்க விரும்புபவர்கள் மற்றும் தேசத்திற்கு சேவை செய்ய விரும்புபவர்கள் தங்கள் இலக்கை அடைய வேண்டும் என்று கூறினார். அவர்களது ஆதரவாளர்கள், கூட்டாளிகள் மற்றும் முதலீட்டாளர்களாக தாங்கள் இருப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.

அதானி தமது உரையை முடிக்கும்போது, "நீங்கள் இன்று காப்பாற்றும் முதுகெலும்பு, எங்கள் பாலங்களை உருவாக்கும் பொறியாளருக்கோ, எங்கள் நகரங்களுக்கு உணவளிக்கும் விவசாயிக்கோ, எங்கள் அடுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் விஞ்ஞானிக்கோ சொந்தமாக இருக்கலாம். எனவே நாம் நிமிர்ந்து நிற்போம். நாம் ஒன்றிணைந்து நிற்போம். ஒரு சிறந்த தேசத்தின் முதுகெலும்பை உருவாக்குவோம்," என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+