கம்பீர் மீதான குற்றச்சாட்டு.. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்?
Recommended Video
டெல்லி: டெல்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீருக்கு இது சோதனைக்காலம். இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், நெட்டிசன்களும் அவருக்கு ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளனர்.
டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் களமிறக்கப்பட்டுள்ளார். அவரது முக்கிய போட்டியாளராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி களமிறக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார், அதிஷி. அப்போது அவர் கூறுகையில், பெண் என்றும் பாராமல் என்னை பற்றி மிகவும் மோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்து துண்டு பிரசுரங்களை கம்பீர் சார்பில் தொகுதியில் வினியோகித்து வருகின்றனர் என்று தெரிவித்ததோடு, உடைந்து அழுதார்.

துண்டு பிரசுரங்கள்
அவர் பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்த துண்டு பிரசுரத்தில், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. இதனிடையே, இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், திட்டமிட்டு அவரே உருவாக்கியிருப்பதாக கவுதம் கம்பீர் மீது குற்றம்சாட்டினார். தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால், போட்டியில் இருந்தே விலகுவதாக கம்பீர் கூறினார்.
|
ஹர்பஜன்சிங் சப்போர்ட்
இந்த நிலையில், கவுதம் கம்பீருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன்சிங் ஆதரவு அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், கவுதம் கம்பீர் தொடர்பான சம்பவங்களை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை எனக்கு ரொம்ப நன்றாக தெரியும். எந்த பெண் குறித்தும் மோசமாக அவர் பேசியதில்லை. அவர் தேர்தலில் வெற்றி பெறுவாரா, பெற மாட்டாரா என்பது வேறு விஷயம், ஆனால் கம்பீர் இதையெல்லாம் விட மேலானவர். இவ்வாறு ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டை சுமார் 18 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர். 56 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
|
விவிஎஸ் லட்சுமண்
இதேபோல பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர், விவிஎஸ் லட்சுமணன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், நேற்றைய சம்பவங்களை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கவுதம் கம்பீரை, சுமார், 20 ஆண்டுகளாக எனக்கு தெரியும். அவர் நேர்மையானவர், பெண்கள் மீது மதிப்பு கொண்டவர் என்பதில் நான் ரொம்பவே உறுதியாக உள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
|
நெட்டிசன்கள்
சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள், கம்பீர் ரசிகர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் #IstandWithGambhir என்ற ஹேஷ்டேக்கில் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். அதில் அவரது நற்செயல்களை பட்டியலிட்டு வருகிறார்கள் ஆதரவாளர்கள்.
|
திருநங்கைகள் ஆதரவு
திருநங்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் நெற்றியில் பொட்டு வைத்து, சேலை உடுத்தி நெகிழ வைத்தவர் கம்பீர். அவர் பெண்ணுக்கு எதிராக மோசமாக துண்டு பிரசுரம் வெளியிட்டார் என்பதை நம்ப தயார் இல்லை. ஆம் ஆத்மி கட்சியை பற்றி எங்களுக்கு தெரியும் என்கிறார் இந்த நெட்டிசன்.
|
ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு உதவி
2017ம் ஆண்டு சுக்மா பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு ஐபிஎல் பணத்தை நன்கொடையாக கொடுத்தவர் என்பதில் ஆரம்பித்து, ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவு ஏற்றது வரை பல்வேறு நற்செயல்களை பட்டியலிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications