Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காசா அமைதி.." டிரம்ப் வசம் போகும் முழு கண்ட்ரோல்.. பெரிய தொகை வேற தரணுமாம்! இந்தியாவுக்கும் அழைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காசாவில் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அங்கு டிரம்ப் அமைதிக் குழுவை உருவாக்கும் முயற்சியை எடுத்துள்ளார். அதற்கு இந்தியாவுக்கும் அழைப்பு வந்துள்ளது. இந்த அமைதிக் குழுவை டிரம்ப் முன்மொழிய என்ன காரணம்.. இந்த அமைதிக் குழுவின் பவர் என்ன.. இதில் டிரம்ப்பிற்கு இருக்கும் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

காசா பகுதியின் ஸ்திரத்தன்மை மற்றும் புனரமைப்புக்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 'அமைதிக் குழுவில்' (Board of Peace) சேர இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போருக்குப் பிந்தைய காசாவின் எதிர்காலத்தை வரையறுப்பதில் இந்தியா ஒரு முக்கியப் பங்கை வகிக்கும் நாடாக மாறுவதையும், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதையுமே இந்த அழைப்பு காட்டுகிறது.

Gaza Board of Peace What Is the new middle east peace plan amp amp Why India Invited by Donald Trump

'அமைதிக் குழு' என்றால் என்ன?

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான சண்டைக்குப் பிறகு காசாவில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கான டிரம்ப்பின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய சர்வதேச அமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. போர்ச் சூழலில் இருக்கும் காசாவில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இந்தக் குழு மேற்பார்வையிடும்.. பாலஸ்தீன பகுதியின் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஆதரவு ஆகியவற்றை இது ஒருங்கிணைக்கும்.

தற்காலிகப் போர்நிறுத்தங்களைத் தாண்டி, மத்தியக் கிழக்கில் நீண்டகால அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்த இது ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு" என்று தனது திட்டத்தை டிரம்ப் விவரித்துள்ளார். இந்த முன்மொழிவு 2025ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, பின்னர் ஐநா பாதுகாப்புச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அமைதிக் குழுவின் பணிகள் என்ன?

இந்த அமைதிக் குழுவுக்கு ஒரு ஆலோசனைக் குழுவை விடவும் கூடுதல் பவர் இருக்கும். போருக்குப் பிறகு காசாவை மீட்டு நிர்வகிப்பதில் இது ஒரு முக்கியப் பங்கை வகிக்கும்.பாதுகாப்பு மற்றும் ஸ்திரப்படுத்தும் முயற்சிகளை மேற்பார்வையிடுதல்சர்வதேச புனரமைப்பு நிதியுதவியை ஒருங்கிணைத்தல்சரியான நிர்வாக வழிமுறைகளை உருவாக்குவதுமனிதாபிமான உதவிகள் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்வது ஆகியவற்றை இந்த குழு மேற்பார்வையிடும்.

தற்போது அங்கு ஏற்கனவே இருக்கும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்த குழு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மற்ற வழிகளைக் காட்டிலும் விரைவாக மீட்புப் பணிகளைச் செயல்படுத்த இதுவே சரியான வழி என்கிறார் டிரம்ப்!

குழுவில் யாரெல்லாம் உள்ளனர்?

இக்குழுவில் மூத்த அரசியல் தலைவர்கள், ராஜதந்திரிகள் மற்றும் உலகப் பொருளாதாரத் தலைவர்கள் இடம்பெறுவார்கள். இதுவரை அறிவிக்கப்பட்ட செயற்குழுவில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, டிரம்பின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா ஆகியோர் உள்ளனர்.

இந்தியா, ஜோர்டான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, கிரீஸ், ஹங்கேரி, வியட்நாம், சைப்ரஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்குக் குழுவில் சேர அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுக்கு அழைப்பு கிடைத்ததை உறுதிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானும் உறுதி செய்துள்ளது..

இந்தியாவுக்கு அழைப்பு ஏன்

மத்திய கிழக்கு விவகாரத்தில் இந்தியாவின் சமநிலையான நிலைப்பாட்டையும், உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கையும் தான் டிரம்பின் இந்த அழைப்பு காட்டுகிறது. இஸ்ரேலுடன் இந்தியா வலுவான தூதரக மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளது.. அதேசமயம் பாலஸ்தீன உரிமைகளையும் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளையும் தொடர்ச்சியாக ஆதரித்து வருகிறது.

அங்கு இரு நாடுகளை (இஸ்ரேல், பாலஸ்தீனம்) உருவாக்குவதே ஒரே தீர்வு என இந்தியா நீண்ட காலமாகச் சொல்லி வருகிறது. இந்தியா மேற்கத்திய நாடு இல்லை. அதேநேரம் உலகளாவிய செல்வாக்குடன் நம்பகத்தன்மையைப் பெற்று இருக்கிறது. இதுவும் டிரம்ப்பின் அழைப்புக்குக் காரணமாக இருக்கலாம். இதன் மூலம் அங்கு அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியா அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வழிவகுக்கும்.

அமெரிக்க அதிகாரி ஒருவர் வெளியிட்ட அழைப்புக் கடிதத்தில், இந்தியாவின் தலைமை பாராட்டப்பட்டது. மேலும், "இப்பிராந்தியத்திற்கு பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை வடிவமைக்க விரும்பும் நாடுகளுக்கான ஒரு தளம்" என்று அமைதிக் குழுவை அது விவரித்தது.

நிதி மாடல் மற்றும் சர்ச்சை

இந்தத் திட்டத்தில் மிகவும் விவாதிக்கப்படும் அம்சங்களில் ஒன்று அதன் நிதியமைப்பு மாடல். உலக நாடுகள் நாடுகள் மூன்று ஆண்டு காலத்திற்குக் குழுவில் அங்கம் வகிக்கலாம். அதேநேரம் நிரந்தர உறுப்பினராக இருக்க காசாவின் புனரமைப்புக்காக ஒரு பில்லியன் டாலர் ($1 பில்லியன்) பங்களிக்க வேண்டியிருக்கும். இந்தக் குழுவின் தலைவர் என்ற முறையில் டிரம்பிற்கு தான் இதில் கூடுதல் அதிகாரம் இருக்கும். மறுசீரமைப்பு நிதியை அவரே கவனிப்பார்.

அப்பகுதியை மறுசீரமைக்க நிதி தேவைப்படும். எனவே, இந்தத் திட்டம் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்த உதவுகிறது என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். அதேநேரம் பணம் செலுத்தினால் மட்டுமே இந்தச் செயல்முறையில் பங்கேற்க முடியும் என்ற நிலையை இது ஏற்படுத்தும் என்றும் இதனால் ஏழை நாடுகளை முக்கிய முடிவெடுப்பதிலிருந்து விலக்கக்கூடும் என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

விமர்சனங்கள்

ராஜதந்திரத் தேக்கநிலையை உடைப்பதற்கான ஒரு துணிச்சலான முயற்சியாகச் சில வல்லுநர்கள் இந்தக் குழுவைக் கருதுகிறார்கள். அதேநேரம் மற்றவர்கள் இது எந்தளவுக்கு உதவும் என்பது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். இது ஐக்கிய நாடுகள் சபையின் பங்கைக் குறைக்கும் என்றும் ஏற்கனவே உள்ள சர்வதேச கட்டமைப்புகளைப் புறக்கணிக்கலாம் என்றும் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

அதேநேரம் பாலஸ்தீனிய தலைமைத்துவத்துடன் குழு எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படும், பிராந்திய நாடுகள் என்ன பங்கை வகிக்கும், மத்தியக் கிழக்கு அரசியல் எப்படிக் கையாளப்படும் ஆகிய கேள்விகளுக்குப் பதில் இல்லை. அதேபோல அதிகாரம், காலக்கெடு மற்றும் பொறுப்புகள் குறித்தும் தெளிவான விளக்கங்கள் இல்லை.

இந்தியாவின் ராஜதந்திர உறவுகள்

தனக்கு அழைப்பிதழ் வந்துள்ளதை இதுவரை இந்தியா உறுதி செய்யவில்லை. அதிகாரிகள் இந்த முன்மொழிவைக் கவனமாக மதிப்பிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வது, சர்வதேச அமைதி முயற்சிகளில் இந்தியாவின் செல்வாக்கை மேம்படுத்தலாம். ஆனால், இது சிக்கலான பிராந்திய அரசியல் உறவுகளைச் சமநிலைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் கொண்டுள்ளது.பிராந்திய ஸ்திரத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு, மேற்கு ஆசியாவில் உள்ள இந்தியப் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுடனான உறவு போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இந்தியா ஒரு முடிவை எடுக்கும்.

இது ஏன் முக்கியம்?

அமைதிக் குழுவில் இணைய அழைக்கப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் அதிகாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகள் சர்வதேச மோதல்களைத் தீர்ப்பதில் அத்தியாவசியமானதாகப் பார்க்கப்படுகின்றன. இந்த முயற்சி வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும், உலகின் மிகவும் கொந்தளிப்பான பகுதிகளில் அமைதியை எப்படி உருவாக்குவது என்பது குறித்து மறுபரிசீலனை செய்வதற்கான முயற்சியை இது குறிக்கிறது.காசாவின் போருக்குப் பிந்தைய எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியா ஒரு முறையான பங்கை வகிக்குமா என்பதையும், டிரம்ப்பின் லட்சிய அமைதித் திட்டம் நீடித்த பலனை வழங்குமா என்பதையும் உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+