வாகன இன்சூரன்ஸ் புதுப்பிப்பு.. கால அவகாசத்தை நீட்டிக்கவில்லை.. எந்த சலுகையும் கிடையாது..GI அறிவிப்பு
டெல்லி: வாகன ஆவணங்களின் காலாவதி தேதியை மத்திய அரசு நீட்டித்துள்ள நிலையில், வாகன இன்சூரன்ஸ்களை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன இன்சூரன்ஸ்களின் காலாவதி தேதி நீட்டிக்கப்படவில்லை, அதை காலாவதி தேதி முடிந்ததும் புதுப்பிக்க வேண்டும் என்று பொது இன்சூரன்ஸ் கவுன்சில் அறிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் காலாவதி தேதி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மூலம் நீட்டிக்கப்பட்டது. இதனால் இந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்க வேண்டியது இல்லை.

கொரோனா காரணமாக லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இதனால் ஆவணங்களை புதுப்பிக்க வேண்டியது இல்லை. மாறாக டிசம்பர் 31ம் தேதி வரை இதே ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்தது.
ஓட்டுநர் உரிமம், எப்சி உள்ளிட்ட ஆவணங்களுக்கு இந்த சலுகை பொருந்தும். பிப்ரவரி 1ம் தேதிக்கு பின் காலாவதியான ஆவணங்கள், இனி டிசம்பர் 31 வரை காலாவதியாக உள்ள ஆவணங்கள் அனைத்துக்கும் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த காலக்கெடு நீட்டிப்பு வாகன இன்சூரன்ஸ்களுக்கு பொருந்தாது என்று பொது இன்சூரன்ஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் பொதுத்துறை அமைப்பான பொது இன்சூரன்ஸ் கவுன்சில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி மத்திய அரசின் காலக்கெடு நீட்டிப்பின் கீழ் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வராது. இதனால் மக்கள் தங்கள் வாகன இன்சூரன்ஸ் தேதி முடிவடைந்தால் அதை உடனே புதுப்பிக்க வேண்டும்.
தங்கள் இன்சூரன்ஸ் காலக்கெடு முடியும் போது எல்லோரும் புதுப்பிக்க வேண்டும். இதில் எந்த விதமான சலுகையும் அறிவிக்கப்படவில்லை. இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் விதியில் தேதி மாற்றங்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications