இரண்டாக உடையும் இந்தியா.. எதிர்காலத்தில் இதுதான் நடக்கும்! ஆய்வாளர்கள் கணிப்பு
டெல்லி: இமயமலை, இந்திய நிலத்தட்டும், யூரேசிய நிலத்தட்டும் மோதியதால் உருவானது. இந்நிலையில் இந்த தட்டுக்கள் விலகி இந்தியா இரண்டாக உடைய வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
நெதர்லாந்தின் உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் புவி இயக்கவியல் நிபுணரான ஃபேபியோ கேபிடானியோ இது குறித்து கூறியுள்ளார். அதாவது, "டெக்டானிக் தகடுகள் நகர்வதால்தான் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. உயரமான மலைகளும் இதனால்தான் உருவாகிறது. இன்றைக்கு இருக்கும் இமயமலையும் கூட இப்படித்தான் உருவாகியிருக்கிறது. ஆனால் இதை உருவாக்கிய இதே நில தட்டுக்கள், இந்தியா இரண்டாக உடைவதற்கும் காரணமாக மாறிவிட இருக்கிறது.

ஆய்வாளர்களுக்கிடையே நீண்ட காலமாக டெக்டோனிக் தகடுகள் நகர்தல் (Tectonic plates unzipping) எனும் கருதுகோள் இருந்து வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட காலம் வரை ஒன்றாக இருக்கும் நில தட்டுக்கள், பின்னர் தானாக பிரிந்து சென்றுவிடும். இந்தியாவிலும் அதுதான் நடக்க இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
உலகம் உருவான காலத்தில் மொத்தமாக ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்றும், அது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு நிலப்பரப்பாக பல துண்டுகளாக உடைந்தது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படி உடைந்ததால் உருவானதுதான் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற கண்டங்கள். பூமியின் சுழற்சி, அதற்கேற்ப மாறும் வானிலை, எரிமலை வெடிப்புகள், விண்கல் தாக்குதல், சூரியன் மற்றும் நிலவின் ஈர்ப்பு சக்தி ஆகியவை நிலப்பரப்பை உடைப்பதிலும் சேர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்தியா என்பதும் முழுமையான நிலப்பரப்பு அல்ல என்கிற கருத்தும் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதாவது, இந்தியா பல்வேறு சிறிய நிலப்பரப்பை உள்ளடங்கிய பெரிய நிலப்பரப்பாக தற்போது இருக்கிறது.
தற்போதைய கூற்றின்படி இந்தியாவின் திபெத் எல்லையில் உள்ள இமயமலை பகுதி இரண்டாக உடைய இருக்கிறது. ஆனால் உடனடியாக இது நடக்காது. குறைந்தபட்சம் சில லட்சம் ஆண்டுகள் ஆகலாம். ஆனால் இதற்கான தொடக்க அறிகுறிகள் தற்போதே கூட தெரிய தொடங்கிவிடும். நிலநடுக்கம் இதன் முதல் அறிகுறி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கூட திபெத் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 95 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications