இந்தியாவுக்கு வந்துட்டு டீ குடிக்காமல் போவதா.. தெருவோர கடையில் தேனீர் அருந்திய ஜெர்மனி அதிபர்
இந்தியாவுக்கு வந்த ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் டீ அருமையாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியா தலைநகர் டெல்லிக்கு வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் சாணக்கியபுரியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு சூப்பராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஊருக்கு சென்றால் ஒவ்வொரு உணவு வகைகள், நீராகாரங்கள், காரங்கள், இனிப்புகள், குளிர்பானங்கள், பிரபலமாக இருக்கும். அவற்றை நாம் அங்கு செல்லும்போது சுவைத்து பார்ப்பது அலாதிப்பிரியம்தான்.
அது போல் பார்சல் வாங்கி வர முடிந்தவற்றை வாங்கிக் கொண்டு நம் குடும்பத்தினருக்கு கொடுப்போம். அந்த வகையில் இந்தியாவில் டீ, காபி பிரபலமான பானம் ஆகும். வெளிநாடுகளில் பிளாக் டீ மிகவும் பிரபலம்.

இந்தியா
இதனால் இந்தியா வரும் வெளிநாட்டவர் டீ, காபியை சுவைப்பதை விரும்புவர். வெளிநாட்டு அரசியல் பிரதிநிதிகளாக இருந்தால் இந்திய தூதரகம் சார்பில் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உணவு வகைகளை அறிமுகப்படுத்தப்படும். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இரு நாட்கள் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வந்துள்ளார்.

இந்தியா- ஜெர்மனி
இந்தியா- ஜெர்மனி இடையேயான இரு தரப்பு உறவுகளை விரிவுப்படுத்துவது குறித்தும் உக்ரைன் பிரச்சினை குறித்து விவாதிக்கவும் இந்தியா வருகை தந்துள்ள ஷோல்ஸ், 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெர்மனி அதிபராக பொறுப்பேற்றார். அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவர் முதல்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

ஜெர்மனி அதிபர்
இந்த நிலையில் ஜெர்மனி அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். அத்துடன் இருவரும் இணைந்து செய்தியாளர்களையும் சந்தித்தனர். ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்கெனவே நல்லுறவு நிலவி வருகிறது.

டீ குடித்தல்
இந்த உறவு வலுபடும் என நான் நம்புகிறேன். நமது நாடுகளின் வளர்ச்சி மற்றும் உலகின் அமைதி தொடர்பான விஷயங்களை தீவிரமாக விவாதிப்போம் என்றார். இந்த நிலையில் ஓலாப் ஸ்கோல்ஸ் டெல்லியில் சாணக்கியபுரியில் ஒரு தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதை இந்தியாவுக்கான ஜெர்மன் தூதரகம் வெளியிட்டுள்ளது.

என்னா ருசி
இந்தியாவில் மிகவும் ருசியான தேனீரை சுவைக்காமல் எப்படி சுற்றி பார்ப்பது? சாணக்கியபுரியில் தெருவோரத்தில் உள்ள எங்களுக்கு பிடித்த தேனீர் கடையில் ஓலாப் ஸ்கால்ஸ் டீ குடித்தார். நீங்கள் அங்கு சென்று டீ குடிக்க வேண்டும். இந்தியாவின் உண்மையான ருசி என தூதரகம் சார்பில் பதிவிடப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications