நான் எருமை மேய்கிறேன்.. பாபா ராம்தேவின் பதஞ்சலி நெய் “பொய்” - சொல்வது பாஜக எம்.பி
டெல்லி: பிரபல சாமியார் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நெய் போலியானது என பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் உடல்நலத்தை பேணுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார்.
உத்தரப்பிரதேசத்தின் கைசஞ்ச் மாவட்டத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்ட பிரிஜ் பூஷன், எருமை மற்றும் மாடுகளை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

போலி நெய்
அவர் தனது உரையில், "நாமும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க தூய்மையான பால் மற்றும் நெய்யை உட்கொள்ள வேண்டும். நானும் எருமைகளை மேய்க்க செல்கிறேன். யோகா குருவின் மிகப்பெரிய நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் நெய் போலியானது.

உடல்நலம் அவசியம்
நீங்கள் எருமைகள் மற்றும் மாடுகளை வளர்த்தால் தூய்மையான நெய்யும் பாலும் கிடைக்கும். இல்லை என்றால் போலியான நெய்தான் கிடைக்கும். நல்ல உடல்நலத்தோடு இருப்பவர்கள்தான் செல்வந்தர்கள். உடல்நலம் குன்றிய நபருக்கு குழந்தையும் உடல்நலம் குன்றிய நிலையில்தான் பிறக்கும்.

வீட்டில் பாலை எடுக்க வேண்டும்
நல்ல உடல்நலத்தோடு இருக்க தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் இருந்தே பாலையும் நெய்யையும் எடுக்க வேண்டும்." என்றார். இந்த நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த மற்ற தலைவர்களும், தொண்டர்களும் இருந்தனர். அப்போது அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாபா ராம்தேவ்
யோகா குரு பாபா ராம்தேவ் பாஜக ஆதரவாளராக அறியப்படுகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி இந்திய அளவில் பிரபலமானார். கடந்த 2006 ஆம் ஆண்டு இவரும் பால்கிருஷ்ணா என்பவரும் இணைந்து பதஞ்சலி நிறுவனத்தை தொடங்கினர்.

நாடு முழுவதும் விற்பனை
உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அழகு சாதன பொருட்கள் பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உத்தராகண்ட் மாநிலம் ஹரிதுவார் தொடங்கி தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் பதஞ்சலி விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

விளம்பரமும் புகாரும்
பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஆயுர்வேதம் என்றும் முழுக்க முழுக்க இயற்கையாக தயாரிக்கப்பட்டது எனவும் கூறி விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன். ஆனால் அவற்றில் ரசாயன கலப்படமும் இருப்பதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உத்தராகண்ட் தடை
தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி மருந்துகளுக்கு உத்தராகண்ட் அரசு 2 ஆண்டுகள் தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி கொரோனில் என்ற மருந்தும் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக அந்த நிறுவனம் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications