Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லீம்கள் எல்லாம் இந்துக்களாக இருந்தவர்கள்தான்! அடுத்து குலாம் நபி ஆசாத் சொன்ன வார்த்தை! பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காஷ்மீரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குலாம் நபி ஆசாத், இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களாகப் பிறந்தவர்கள் என்று சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். இருப்பினும், கருத்து வேறுபாடு காரணமாக இவர் காங்கிரஸில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் காங்கிரஸ் தலைமை மீது சரமாரி புகார்களை முன்வைத்தார்.

Ghulam Azad says Majority Of Muslims In India Have Converted From Hinduism

அதைத் தொடர்ந்து காஷ்மீரில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற புதிய கட்சி ஒன்றையும் தொடங்கினர். இதற்கிடையே இஸ்லாமிய மதம் தொடர்பாக அவர் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆசாத்: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆசாத், பெரும்பான்மையான இந்திய முஸ்லீம்கள் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் தான் என்றார். மேலும், இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அங்குள்ள பெரும்பாலான பண்டிட்கள் தான் இஸ்லாத்துக்கு மாறியவர்கள் என்று அவர் தெரிவித்தார். மேலும், அரசியல் லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறிய குலாம் நபி ஆசாத், அரசியலில் மதத்தில் புகுத்த பார்ப்போர் பலவீனமானவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அங்கு நடந்த கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், "முஸ்லிம்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் சில பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள்... யாரும் இங்கே வெளியில் இருந்து வந்தவர்கள் இல்லை.. இஸ்லாம் மதம் தோன்றி 1,500 ஆண்டுகள் தான் ஆகிறது.. இந்து மதம் அதற்கு முன்பே தோன்றியது.. மிகவும் பழமையானது. 10-20 பேர் முஸ்லிம்கள் வெளியில் இருந்து வந்திருக்கலாம்.. அவர்களில் சிலர் முகலாய ராணுவத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

அனைவரும் என்ன இஸ்லாமியர்களா: மற்ற அனைத்து முஸ்லிம்களும் இந்தியாவில் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் தான்.. இதற்கு ஒரு உதாரணம் காஷ்மீரில் உள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் இருந்த முஸ்லிம்கள் யார்? அவர்கள் அனைவரும் காஷ்மீரி பண்டிட்டுகள். அவர்கள்தான் இஸ்லாத்திற்கு மாறினார்கள்.

அனைவரும் இந்து மதத்தில் பிறந்தவர்கள்.. இந்துக்கள் இறந்தால் தகனம் செய்கிறார்கள்.. சடலங்கள் வெவ்வேறு இடங்களில் எரிக்கப்படுகிறது. அவற்றின் சாம்பல் ஆற்றில் கலக்கப்படுகிறது. அதை நாங்கள் குடிக்கிறோம். யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை..

இந்திய மண்: அதேபோலத் தான் இஸ்லாமியர்களின் உடலும் நமது மண்ணின் ஒரு அங்கமாக மாறும் .. அவர்களும் இந்த மண்ணின் ஒரு அங்கமாகி விடுகிறார்கள். அவர்களின் உடல் பாரத மாதாவின் அங்கமாகின்றன. இந்துக்களும் முஸ்லிம்களும் இப்படி இந்த மண்ணில் இணைந்தவர்கள் தான்.. இப்படி இருக்கும் போது அவர்களுக்கு இடையே என்ன வித்தியாசம்?.

இங்குச் சிலர் அரசியலில் மதத்தைப் புகுத்துகிறார்கள்.. அரசியலில் மதத்தை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தக் கூடாது. இந்து, முஸ்லீம் பெயர்களை வைத்து ஓட்டுப் போடக்கூடாது. இவையெல்லாம் அவர்கள் எந்தளவுக்குப் பலவீனமானவர்கள் என்பதையே காட்டுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+