இன்று ஆன்லைன் டெலிவரி கிடையாது.! புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடும் பாதிப்பு.. திடீர் வேலைநிறுத்தம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தக் காலகட்டத்தில் டெலிவரி என்பது கிட்டத்தட்ட அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. இன்றிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக ஆர்டர்கள் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே இன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக டெலிவரி ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதனால் டெலிவரி சேவை கடுமையாகப் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே டெலிவரி சேவைகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. முக்கிய நகரங்களில் டெலிவரி என்பது கிட்டத்தட்ட அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. இன்றிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டும் சூழலில், ஆன்லைன் உணவு, மளிகை டெலிவரிகள் நாடு முழுவதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது..

Gig Workers Strike on New Year s Eve 2025 Major Disruptions Expected Across major Indian cities

டெலிவரி ஊழியர்கள் போராட்டம்

பொதுவாகவே ஈ காமர்ஸ், உணவு டெலிவரி, இன்ஸ்டன்ட் டெலிவரி என அனைத்திலும் புத்தாண்டு சமயத்தில் தான் ஆர்டகள் குவியும். ஆண்டில் அதிக ஆர்டர்கள் குவியும் நாட்களில் இதுவும் ஒன்றாகும். அப்படியிருக்கும்போது இன்று டிசம்பர் 31ம் தேதி டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனங்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வேலைநிறுத்தம்

ஜொமேட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட், ஜெப்டோ, அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இதனால் அந்த நிறுவனங்களின் ஆண்டு இறுதி டார்கெட் கூட அடைய முடியாமல் போகலாம்! தெலங்கானா கிக் & பிளாட்ஃபார்ம் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய ஆப் அடிப்படையிலான போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டமைப்பு இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், இதில் பலரும் பங்கேற்பார்கள் என்றே தெரிகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி-என்சிஆர், மேற்கு வங்கம், தமிழகம் என பல பகுதிகளில் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது..

டெலிவரி ஊழியர்களுக்குக் கிடைக்கும் வருவாய் குறைந்து வருவதாகவும் இதனால் டெலிவரி ஊழியர்கள் நீண்ட நேரம் வேலை செய்யக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. டெலிவரி டார்கெட், வேலைப் பாதுகாப்பின்மை எனப் பல பிரச்சினைகள் இருப்பதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாக IFAT அமைப்பு மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. சுமார் 4 லட்சம் டெலிவரி ஊழியர்களைப் பிரதிநிதித்துவம் இந்த அமைப்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

கிறிஸ்துமஸ் பாதிப்பு

முன்னதாக, கிறிஸ்துமஸ் தினத்தன்று கடந்த டிசம்பர் 25ல் இந்த அமைப்பினர் நாடு தழுவிய திடீர் வேலைநிறுத்தத்தை நடத்தினர். இதனால் பல நகரங்களில் டெலிவரி சேவை 50-60% வரை பாதிக்கப்பட்டது. இருப்பினும், அப்போதே அந்த நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லையாம். மாறாக டெலிவரி ஊழியர்களை அச்சுறுத்துவது, அபராதம் விதிப்பது, வேலை நிறுத்தத்தை ஒடுக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சிக்கல்கள் என்ன

டெலிவரி ஊழியர்கள் சில முக்கியமான பிரச்சினைகளைக் குறிப்பிடுகிறார்கள். டெலிவரிக்கான வருவாய் குறைந்து கொண்டே போகிறது. இதனால் அதிக நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதேபோல தன்னிச்சையாக டெலிவரி ஊழியர்களின் ஐடி தடை செய்யப்படுகிறது. இதுபோல ஐடி தடை செய்யப்படும்போது அவர்களால் மேற்கொண்டு டெலிவரி செய்ய முடியாது. எந்தவொரு விளக்கமும் கேட்காமல் இதுபோல ஐடியை தடை செய்வதை நிறுத்த வேண்டும் என்பதும் இவர்கள் கோரிக்கையாக இருக்கிறது. சுகாதாரக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, ஓய்வூதியம் தேவை என்றும் வலியுறுத்துகிறார்கள்.

இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் டெலிவரி ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை நடத்துகிறார்கள். இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் டெலிவரி சேவை கடுமையாகப் பாதிக்கப்படும் என்றே தெரிகிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+