அன்புமணி ராமதாஸுக்கே பாமக சொந்தம்.. தேர்தல் ஆணையம் கொடுத்த கடிதம்! முறைகேடு என ஜி.கே.மணி விமர்சனம்
டெல்லி: கடந்த 2023ம் ஆண்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது. எனவே, பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நீடிக்க 2026ம் ஆண்டு வரை அதிகாரம் இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் கட்சிக்கு கடிதம் கொடுத்திருக்கிறது. இது ஜனநாயக படுகொலை என கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி விமர்சித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த ஜிகே மணி கூறியதாவது, "மருத்துவர் அன்புமணி 2023 பொது குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2026 ஆம் ஆண்டு வரை தலைவராக நீடிப்பார் என்று தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்திருக்கிறது.

கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி சென்னை திருவேற்காட்டில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அடுத்த நாள், அதாவது மே மாதம் 29ஆம் தேதி, அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.
அதில் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், இதர நிர்வாகிகளை குறிப்பிட்டும் எழுதி இருந்தார். அப்படியெனில் அவரது பதவி காலம் 3 ஆண்டுகளில் முடிந்து விட்டது. ஆனால் 2023 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்ததாகவும், அதில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், எனவே அவரது பதவி காலம் 2026 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும், தேர்தல் ஆணையம் தற்போது கூறியிருக்கிறது. இப்படி சொல்வதன் மூலம் கட்சியை தேடியதற்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நாங்கள் டெல்லியில் போராட்டத்தை நடத்துவோம்" என்று ஜி.கே.மணி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications