ரியல் எஸ்டேட்.. வாடகை வீட்டுதாரர்களுக்கு வந்த புது சிக்கலை பாருங்க.. அதென்ன 15%.. மத்திய அரசு சரவெடி
டெல்லி: வாடகை வீட்டுதாரர்களுக்கு நிலவும் சிக்கலை கருத்தில் கொண்டு, ரியல் எஸ்டேட் துறைக்கு முக்கிய உத்தரவை ஒன்றை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது.
கடந்த 1ம்தேதி நடந்து முடிந்த இடைக்கால பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றாலும், நடுத்தர வர்க்க மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி ஒன்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார்.
அதாவது, வீடுகளை வாங்குவதற்கும் கட்டுவதற்கும் மத்திய அரசு வீட்டு வசதி திட்டத்தை கொண்டு வர போவதாக அதிரடியாக அறிவித்திருந்தார்.. வாடகை வீடுகள், குடிசை பகுதிகள் அல்லது அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தின் தகுதியான பிரிவினருக்கு, சொந்த வீடுகளை வாங்கவும், கட்டவும் உதவும் திட்டத்தை அரசு தொடங்கும் என்றும் நிதியமைச்ச்ர கூறியிருந்தார்.

நிதியமைச்சர்: இந்த அறிவிப்பானது, நடுத்தர வர்க்க மக்களிடையே நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு அதிரடியை மத்திய அமைச்சர் பிறப்பித்திருக்கிறார்.. சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் லட்சியமாகவே அமைந்துவிடுகிறது.. இந்த லட்சியத்தை அடைவதற்காக தங்கள் வாழ்நாளையே பணயம் வைக்க வேண்டியதாகிவிடுகிறது.
எனினும், சிறு சேர்த்த பணத்தை கொண்டு, வீடு கட்டுவதற்காக, கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறையினரை பொதுமக்கள் நாடி வருகிறார்கள். ரியல் எஸ்டேட்தாரர்களும், வாடகை வீட்டுதாரர்களை புதிய வீட்டுமனை டெண்டருக்கு ஒப்புக்கொள்ள வைப்பதற்காக, வீடு கட்ட தேவைப்படும் வழக்கமான தொகையை விட 15 சதவீதம் குறைத்து சொல்கிறார்களாம். முடிவடையும்போது, விலைகள் அதிகரித்து, பில்டர்கள் மற்றும் பயனாளிகள் இருவரையும் பாதிக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது.
கட்டுமான பொருள்: வீட்டுமனை வேலை முடியும்தருவாயில், அடிக்கடி ஏறும் கட்டுமான பொருட்களின் விலையால், பில்டர்களும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான், இதனை ஈடுகட்டுவதற்காகவே, வீட்டுக்காரர்களிடம் டெண்டரின்போது ஒப்புக்கொண்ட தொகையை விட கூடுதல் தொகையை வசூலிக்க நேரிடுகிறதாம்.
ஆனால், இது 2 தரப்பினருக்குமிடையே மோதலை ஏற்படுத்திவிடுகிறது.. இதுபோன்ற சங்கடங்களை தவிர்ப்பதற்காக, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுசல் கிஷோர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிரடி அறிவிப்பு: அந்த அறிக்கையில், கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்தவர்கள் வீட்டுவசதி மற்றும் குறைந்த விலை வீட்டு திட்டங்களுக்கான டெண்டர்களின்போது, விலையை குறைக்க வேண்டாம் என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் மத்திய இணை அமைச்சர்.. இந்த அறிவிப்பானது, ரியல் எஸ்டேட் மற்றும் பொதுமக்கள் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் என்பதுடன், இரு தரப்பிற்கும் இணக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications