இவருமா?.. லிஸ்ட்டில் கூட பேர் இருந்ததே.. அடுத்த விக்கெட்டையும் இழந்த கதர் கட்சி.. அடித்து ஆடும் தீதீ
கோவாவில் இன்னொரு காங்கிரஸ் எம்எல்ஏவும் பதவி ராஜினாமா செய்தார்
டெல்லி: கோவாவில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சிக்கு ஷாக் தந்துள்ளார்.. இது காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை தந்துள்ளது.
கோவா உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.. இதற்காக அந்தந்த மாநில கட்சிகள் தீவிரமான களப்பணியில் மும்முரமாகி வருகின்றன.
இந்த தேர்தல்களில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பாஜகவும், இன்னொரு பக்கம் காங்கிரசும் கங்கணம் கட்டி வருகின்றன.. இதற்கான புது புது வியூகங்கங்கள், மாஸ்டர் பிளான்களில் ஈடுபட்டு, அதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டும் வருகின்றன.

உட்கட்சி பூசல்
ஆனால், பாஜக அளவுக்கு காங்கிரஸ் டஃப் தருமா என்பது தெரியவில்லை.. தலைமையே இல்லாமல் ஒரு தேசிய கட்சி 3 வருஷமாக இயங்கி கொண்டிருப்பது, அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.. மேலும் உட்கட்சி பூசல் காரணமாக, முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்தும் விலக ஆரம்பித்துள்ளனர்.. இப்படி விலகியவர்களையும், அதிருப்தியில் உள்ளவர்களையும் தங்கள் கட்சியில் இழுத்து போடும் வேலையில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் கையில் எடுத்துள்ளன.

பாஜக
அதிலும், கோவா மாநில காங்கிரஸ் சறுக்கி கொண்டு போகிறது.. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17-ல் வெற்றி பெற்றது.. ஆனால் 13 தொகுதிகளில் வென்ற பாஜகவோ மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது... இதற்கு பிறகு, காங்கிரஸில் இருந்து பல எம்எல்ஏக்கள் மெல்ல மெல்ல விலகியதையும், அதில் பலர் பாஜகவிலும் இணைந்ததையும் மறுக்க முடியாது.

விக்கெட்
அவ்வளவு ஏன், சமீபத்தில் முதல்வரான லுாய்ஜின்ஹோ பலோரா, காங்கிரஸில் இருந்து விலகி மம்தா கட்சியில் இணைந்தார். இவரை தொடர்ந்து, மாஜி முதல்வரான ரவி நாயக்கும் கட்சியில் இருந்து விலகினார்.. இப்போது இன்னொரு விக்கெட்டையும் காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது.. அக்கட்சியின் மாநில செயல் தலைவர் அலெக்சிகோ ரெஜினால்டோ லூரென்கோ தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. அந்த ராஜினாமா கடிதத்தையும் சபாநாயகரிடம் தந்துவிட்டார்.. கட்சியில் இருந்தும் விலகிவிட்டதாக செய்திகள் வருகின்றன..

அறிவிப்பு
இப்போது சிக்கல் என்னவென்றால், 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டசபையில் காங்கிஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் பலம் மேலும் குறைந்துவிட்டது.. கடந்த வாரம்தான், காங்கிரஸ் கட்சி, தன்னுடைய 8 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அங்கு வெளியிட்டிருந்தது.. அதில் இப்போது ராஜினாமா செய்த லூரென்கோவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.. வேட்பாளர் லிஸ்ட்டில் பெயரை காங்கிரஸ் அறிவித்தும், அக்கட்சியில் இருந்து ஒருவர் விலகுகிறார் என்றால், கட்சியின் பலவீனமா? அல்லது எதிர்க்கட்சிகளின் பலமா என்று தெரியவில்லை..

அதிர்ச்சி
இப்போது விலகி உள்ள லூரென்கோ, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் இணையலாம் என்கிறார்கள்.. ஏற்கனவே பதவி விலகிய ரவி நாயக், பாஜகவில் இணைவார் என்கிறார்கள்.. இப்படி நாளுக்கு நாள் கதர் கட்சி கறைந்து காணாமல் போய் கொண்டிருப்பது அத்தொண்டர்களை சோர்வடைய வைத்து வருகிறது.. விழித்துகொள்ளுமா காங்கிரஸ்?!












Click it and Unblock the Notifications