Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கலர்" மாறும் பாஜக.. அடுத்த விக்கெட்டையும் இழந்த காங்கிரஸ்.. இதற்கு நடுவில் மம்தா.. பரபரக்கும் களம்

காங்கிரஸ் மேலும் தன்னுடைய பலவீனத்தை பெற்று வருகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்னொரு விக்கெட்டையும் இழந்துள்ளது காங்கிரஸ் கட்சி.. முன்னாள் முதல்வரான ரவி நாயக்கும் கட்சியில் இருந்து விலகிவிட்டார்.. அத்துடன் தன்னுடைய எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.. பஞ்சாபை தொடர்ந்து கோவா என்று ஒவ்வொரு மாநிலமாக, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

சோனியா காந்திக்கு கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை சரியில்லை.. கடந்த 2 வருடத்துக்கும் மேலாகவே, காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்காமல் ராகுல்காந்தியும் ஒதுங்கி வருகிறார்..

மூத்த தலைவர்கள் இதனால் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறார்கள்.. இதில், ஒரு குரூப் விலகி நின்று வேடிக்கை பார்த்து வருகிறது.. ஒரு குரூப் தொடர்ந்து தலைமை பதவி குறித்து ஆலோசனை தந்தும் எடுத்துரைத்தும் வருகிறது..

 பாஜக

பாஜக

ஆனாலும் தலைவர் இல்லாமல் ஒரு தேசிய கட்சி 3 வருஷமாக தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது.. காங்கிரஸின் ஒவ்வொரு சோர்வும், பாஜகவுக்கு தெம்பாகி கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம்... இப்போது காங்கிரஸ் நிலைமை மேலும் மோசமாகி கொண்டு வருகிறது.. கட்சி விலகல் தொடங்கிவிட்டது.. அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க மம்தா ஒரு பக்கம் களமிறங்கி வருகிறார்.. இன்னொரு பக்கம் பாஜக முயன்று வருகிறது.

 அமரிந்தர்

அமரிந்தர்

ஏற்கனவே பஞ்சாப்பில் வலுவாக இருந்த காங்கிரஸ் மெல்ல மெல்ல தன்னுடைய செல்வாக்கையும் இழக்க ஆரம்பித்துள்ளது.. முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், அதிருப்தியில் இருந்தபோதே அவரை சரிக்கட்ட முயன்றும் முடியாமல் தோற்றது காங்கிரஸ் மேலிடம்.. கட்சியை விலகிய பிறகு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கியதுடன், அவர் பாஜகவுடன் இணைந்து செயல்படும் அளவுக்கு இன்று வந்துள்ளார். நேற்றுமுன்தினம்கூட, செய்தியாளர்களிடம் அமரிந்தர் சிங் பேசியது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

பேட்டி

பேட்டி

"பாஜகவுடன் நான் கூட்டணி வைக்க ஒரே ஒரு கண்டிஷன்தான் விதித்தேன்... விவசாயிகள் போராட்டத்திற்குத் தீர்வு காண வேண்டும் என்பதே அது. இப்போதைக்கு விவசாய சட்டங்களை மத்திய பாஜக அரசு நீக்கி விட்டது... விரைவில் பாஜக தலைவர் நட்டாவை சந்திக்க போகிறேன்" என்றார். இது அமரிந்தரின் சொந்த கருத்தாக மட்டும் பார்த்துவிட முடியாது.. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது.. வேளாண் சட்டம் மட்டும்தான் பாஜகவுக்கு சிக்கல் என்றால், அதையும் தளர்த்தி கொண்டு வந்து நிற்கிறது பாஜக.. இதை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லைதான்..

 சிறுபான்மையினர்

சிறுபான்மையினர்

விவசாயிகள் நிறைந்த பஞ்சாப் மாநிலத்திலேயே, காவி கொடிக்கான மவுசு எகிறி வருகிறது என்பதைதான் அமரிந்தர் புரிய வைத்து வருகிறார்.. அதுமட்டுமல்ல, பஞ்சாபில் 36 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள்.. இவர்களில் பெரும்பாலானவர்களை கவரவும் அமரிந்தர் பிளான் போட்டு வருகிறார். அதாவது ஒரு பக்கம் விவசாயிகள், மறுபக்கம் இந்துக்கள் என்பதைதான் பாஜக குறி வைத்து வருகிறது. அதேசமயம், ஒட்டுமொத்த விவசாயிகளும் பாஜக பக்கம் சாய்ந்துவிட வாய்ப்பில்லை, ஜாட் சமூகத்தினரால் பாஜகவுக்கும் பலத்த பாதிப்பு ஏற்படவே கூடும் என்ற கணிப்புகளையும் நாம் மறுக்க முடியாது...

 சீனியர்கள்

சீனியர்கள்

பஞ்சாப்பை கண்ணெதிரே நழுவவிட்டதைபோலதான், கோவா காங்கிரஸிலும் சறுக்கல் நடந்து வருகிறது.. மம்தாவின் அதிரடிகள் கோவாவின் சீனியர்களை கவர்ந்தாலும், பாஜக அதை தட்டிப்பறிக்க முயலவே யோசித்து வருகிறது.. கடந்த 2017 தேர்தலில், அங்குள்ள மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17-ல் வெற்றி பெற்றது.. ஆனால் 13 தொகுதிகளில் வென்ற பாஜகவோ மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது... இதற்கு பிறகு, காங்கிரஸில் இருந்து பல எம்எல்ஏக்கள் மெல்ல விலகினர்..

விலகல்கள்

விலகல்கள்

அதில் ஏராளமானோர் பாஜகவிலும் இணைந்தனர்.. ஆனால், கடந்த சில நாட்களாகவே, மிக முக்கிய புள்ளிகள் விலக ஆரம்பித்துவிட்டனர்.. முதல்வரான லுாய்ஜின்ஹோ பலோரா, காங்கிரஸில் இருந்து விலகி மம்தா கட்சியில் இணைந்தார். இப்போது மாஜி முதல்வரான ரவி நாயக்கும் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.. அத்துடன் தன்னுடைய எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார்.. இவர் இப்போது எந்த கட்சிக்கு போவார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.. இவரது 2 மகன்களும் சமீபத்தில்தான் பாஜகவில் இணைந்தனர்..

 பாஜக

பாஜக

அதனால் இவரும் பாஜகவில் இணைவார் என்கிறார்கள்.. இவரது ராஜினாமாவை தொடர்ந்து, அம்மாநில சட்டசபையில் காங்கிரஸின் பலம் 3ஆக குறைந்துள்ளது அக்கட்சிக்கு மேலும் பலவீனத்தையே பெற்று தந்துள்ளது. உண்மையிலேயே காங்கிரஸ் கட்சி ஏன் தள்ளாடி கொண்டிருக்கிறது? பலம் பொருந்திய பாஜகவை எதிர்க்க போதுமான அளவுக்கு அடித்தளங்களை சரி செய்து கொள்ளாமல் இருப்பது ஏன்? என்ற கவலைதான் எழுகிறது..

 மனக்கசப்பு

மனக்கசப்பு

காங்கிரஸ் தலைமையை பொறுத்தவரை கட்சியில் ஒருத்தருக்கு அதிருப்தி ஏற்பட்டு, அது மனக்கசப்பாக பெருகி, இன்னொரு கட்சிக்கு தாவும்வரை அமைதி காப்பது பெரிய மைனசாக பார்க்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு கீழ் மட்ட அமைப்புக்களில் பாதிப்பை உண்டாக்கும் என்றுகூட தெரியாமல் உள்ளது ஒரு தேசிய கட்சிக்கு பலவீனமாகவே கருதப்படுகிறது... அதிருப்தியாளர்கள், திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தாலும்கூட அது பாஜகவுக்குதான் ஒருபக்கம் பிளஸ் ஆகி கொண்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் என்றைக்கு உணர போகிறதோ?!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+