5 மாநில தேர்தல் முடிவுகள்..நோட்டா பட்டனை அழுத்தி தள்ளிய கோவா.. சீண்டி பார்க்காத மணிப்பூர்.. செம டேட்டா!
டெல்லி: 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் கோவாவும் மணிப்பூரும் சாதனை படைத்துள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உ.பி.க்கு 7 கட்டங்களாகவும், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.
இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியும் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்று வருகிறது. இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

நோட்டா
இந்த தேர்தல்களில் நோட்டா எனப்படும் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்ற ஆப்ஷனை மக்கள் பயன்படுத்தினார்கள். அதன்படி கோவாவில் மொத்தம் பதிவான வாக்குகளில் 1.13 சதவீதமும், உத்தரகாண்ட்டில் 0.79 சதவீதமும், பஞ்சாப்பில் 0.71 சதவீதமும், உ.பி,யில் 0.70 சதவீதமும் மணிப்பூரில் 0.56 சதவீதமும் நோட்டாவுக்கு வாக்கு சென்றது.

5 மாநிலங்களில் நோட்டா
இந்த 5 மாநிலங்களில் நோட்டாவை அதிகம் பயன்படுத்திய மாநிலங்களில் கோவா முதலிடத்தில் உள்ளது. குறைந்த அளவு நோட்டா பயன்படுத்திய மாநிலத்தில் மணிப்பூர் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலிலும் நோட்டாவில் கோவாதான் முதலிடத்தை பிடித்தது. கோவாவில் கடந்த 2017ஆம் ஆண்டு 1.2 சதவீதம் பேர் நோட்டாவை பயன்படுத்தினார்கள்.

2017ஆம் ஆண்டு நோட்டா
உத்தரகாண்டில் 1 சதவீதம் பேரும் உத்தரப்பிரதேசத்தில் 0.9 சதவீதம் பேரும் நோட்டாவுக்கு வாக்களித்தனர். பஞ்சாபில் 0.7 சதவீதம் பேரும் மணிப்பூரில் 0.5 சதவீதம் பேரும் நோட்டாவுக்கு வாக்களித்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலிலும் மணிப்பூரில் குறைந்த அளவிலான நோட்டாக்களே பதிவாகியிருந்தன.

4 இடங்களில் பாஜக முன்னிலை
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஒரு இடத்தில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. இந்த முறை 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முக்கியமானதாக கருதப்படும் நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸின் செயல்பாடுகள் சரிவை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் அந்த கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications