ரேஷன் கார்டு வைத்திருக்கிறீர்களா.. அப்ப இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கிறதா.. அடேங்கப்பா இத்தனை நன்மையா
டெல்லி: ரேஷன் கார்டு தவிர்க்க முடியாத ஆவணமாக விளங்கி வரும்நிலையில், அதுகுறித்த நன்மைகளையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..
ரேஷன் அட்டைகள்: அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன. மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஸ்பெஷல் கேம்ப்: அதேபோல, குறை தீர்ப்பு முகாம் எப்போது என்கிற அறிவிப்பையும் தமிழக அரசு செய்திருந்தது.. இந்த அறிவிப்பானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.. காரணம், ரேஷன் கடைகளில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு வயதானவர்கள், மணிக்கணக்கில் காத்துக்கிடந்து ரேஷன் வாங்குவது சிரமமாக இருக்கும். அதற்காகவே, இந்த அங்கீகார சான்று தமிழக அரசு சார்பாக வழங்கப்படுகிறது..
4 நாட்களுக்கு முன்புகூட கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய செய்தி ஒன்றை அறிவித்திருந்தார்.. நியாய விலை கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியிருக்கும் நிலையில், அடுத்த ஒரு வருடத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இப்படி பல்வேறு வகைகளில் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. அதேசமயம், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மக்களுக்கு ரேஷன் கார்டு வழங்கியுள்ள நிலையில், இந்த ரேஷன் கார்டின் பயன்களை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய உள்ளது.. அந்த முக்கிய அம்சங்கள் இவைகள்தான்: இந்தியாவில் ரேஷன் கடைகள் வாயிலாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை குறைந்த விலையில் பெற்று வருகின்றனர்.
ரேஷன் அட்டைகள்: கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் பரவிய கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின்போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்கியிருக்கிறது.. இந்த ரேஷன் கார்டு மூலமாக உணவு தானியங்கள் மட்டுமல்ல பிற நன்மைகளும் கிடைக்கும்.. காரணம், நம் இந்தியாவை பொறுத்தவரை, ரேஷன் கார்டு, நம் இருப்பிட சான்றாகவும் கருதப்பட்டு வருகிறது.. அதாவது வங்கி கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் ரேஷன் கார்டுதான், சமையல் எரிவாயு, இணைப்பு பெறவும், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பெறவும், அடித்தளமாக இருப்பதே ரேஷன் கார்டு முகவரிகள்தான்..
இந்த முகவரிதான், அனைத்து ஆவணங்களுக்கும் சான்றாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டினை, நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதி பெற்ற மக்கள் அந்தந்த மாநில அரசின் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.. இதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு அவ்வப்போது வெளியிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழிகாட்டியும் வருவது குறிப்பிடத்தக்கது..!!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications