பிளே ஸ்டோரில் இருந்து சீனாவின் டிக் டாக் ஆப்பை நீக்கியது கூகுள்.. ஆப்பிளும் அதிரடி
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் கடிதத்தை ஏற்று, இந்தியாவுக்கான ஆப் பிளே ஸ்டாரில் இருந்து டிக் டாக் ஆப்பினை கூகுள் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் நீக்கியுள்ளன.
இதனால் இனி இந்தியாவில் டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் பெண்கள் மற்றும் குழந்தைகள் டிக் டாக் ஆப்பில் தவறாக சித்தரிக்கப்படுதாக கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று மத்திய அரசு கடிதம் எழுதியதால் டிக் டாக் ஆப் கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

புதிதாக 9 கோடி பேர்
உலக மக்களை அவ்வப்போது சில தொழில்நுட்ப விஷயங்கள் வெகுவாக கவர்ந்துவிடும். அப்படி ஒரு தொழில்நுட்ப விஷயம் தான் டிக் டாக் ஆப். பின்னணி பாடலுக்கு வாயசைத்து, நடனம்ஆடி, டப்ஷ்மாஷ் செய்து பொழுதுபோக்கு வீடியோ வெளியிடும் சீனாவின் ஆப் உலகம் முழுவதும் சில மாதங்களில் அதி வேகமாக பரவியது. இந்தியாவில் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் புதிததாக 8 கோடியே 86 லட்சம் பேர் டிக்டாக் ஆப்பை டவுன்லோடு செய்திருந்தார்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 18 கோடியே 8 லட்சம் பேர் டிக்டாக் ஆப்பை பயன்படுத்துவதாக தகவல் வெளியானது.

தடை செய்ய கோரிக்கை
இந்நிலையில் டிக்டாக் ஆப்பில் தான் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எந்த நேரமும் மூழ்கி கிடக்கும் அளவுக்கு அபாயமாக மாறியது. பெண்கள் சர்வசாதாரணமாக ஆபாசமாகவும், ஆண்கள் அவதூறாகவும் மீம்ஸ் வீடியோக்களை வெளியிடுவதாக புகார் எழுந்தது. இதனிடையே டிக் டாக் சமூக சீரழிவு ஏற்படுவதாகவும், டிக்டாக் ஆப்புக்கு அடிமையாகி சிலர் மரணம் அடைந்துள்ளதாகவும் , இளைஞர்களிடம் ஒழுக்கக்கேட்டை உருவாக்கும் இந்த ஆப்புக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஐகோர்ட் அதிரடி
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கும் முன்பே டிக் டாக் போன்ற சமூகத்தை சீரழிக்கும் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பிளே ஸ்டோர்களில் இருந்து டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

தடைக்கு விலக்கு இல்லை
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய தடை விதிக்குமாறு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் விசாரணையையும் ஒத்திவைத்தது.

கூகுள் நீக்கியது.
இதன்காரணமாக டிக் டாக் ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள், மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது . இதை ஏற்று கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் ஆப்பை நேற்றே நீக்கிவிட்டன.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications