Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் தரணும்.. இல்லைனா திருப்பி அனுப்பணும்.. அவ்ளோதான் ‘பவர்’: சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆளுநர்கள் மசோதாக்களை நிராகரித்தால் அவற்றை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும், நிராகரிப்பதாக மட்டும் கூறி எந்த மசோதாவையும் நிலுவையில் வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் அதிரடியாக குறிப்பிட்டுள்ளது.

பஞ்சாபில் முதலமைச்சர் பக்வந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வருகிறார். பஞ்சாப் அரசு சட்டப்பேரவையில் 27 மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பிய நிலையில், அவற்றில் பல மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை.

Governor if withholds assent to a Bill, has to return it to the legislature: supreme court judgement

இதையடுத்து, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பிர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை மறந்துவிட கூடாது. ஆளுநர்களும், மாநில அரசுகளும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலை அளிக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. அந்த தீர்ப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இயற்றும் மசோதாவை ஆளுநர் தடுத்து வைப்பது, சட்டமன்றச் செயல்முறையை தடம் புரளச் செய்யும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எந்த காரணமும் இல்லாமல் ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வெறுமனே அறிவிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை முடக்குவது, பாராளுமன்ற ஆட்சி முறையின் அடிப்படையிலான அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கே உண்மையான அதிகாரம் உள்ளது. ஆளுநர் என்பவர் அடையாள தலைவர் மட்டுமே. தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலைவராக ஆளுநருக்கு சில அரசியலமைப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், மாநில சட்டமன்றங்களால் சட்டமியற்றும் வழக்கமான போக்கைத் தடுக்க இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது.

நாடாளுமன்ற ஜனநாயக வடிவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்மையான அதிகாரம் உள்ளது, ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்படாத தலைவரே என தெளிவுபடுத்தியுள்ளது உச்சநீதிமன்றம். பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே மசோதா ஒப்புதல் தொடர்பான மோதல்கள் நடைபெற்று வரும் சூழலில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு ஆளுநருக்கு 'செக்' வைப்பதாக அமைந்துள்ளது.

Governor if withholds assent to a Bill, has to return it to the legislature: supreme court judgement

அண்மையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் 'I withhold assent" என்ற குறிப்பை அனுப்பினார். இதையடுத்து, தமிழக அரசு, அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியுள்ளது. ஆளுநர், மசோதாக்களை திருப்பி அனுப்பாமல், ஒப்புதல் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்ததால், மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்ப முடியுமா என்ற குழப்பம் எழுந்தது.

இந்நிலையில், எந்த காரணமும் இல்லாமல் ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வெறுமனே அறிவிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை முடக்குவது ஜனநாயக விரோதம், ஆளுநர்கள் மசோதாக்களை நிராகரித்தால் அவற்றை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும், நிராகரிப்பதாக மட்டும் கூறி எந்த மசோதாவையும் நிலுவையில் வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது, தமிழக ஆளுநர் விவகாரத்திலும் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+