"மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரமே ஆளுநருக்கு இல்லை.." உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் சொன்ன பாயிண்டு
டெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நிலையில், இது தொடர்பாக 14 கேள்விகளைக் கொண்ட ஒரு விளக்கக் குறிப்பை ஜனாதிபதி திரௌபதி முர்மு அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இதில் மேற்கு வங்க அரசு சில முக்கிய வாதங்களை முன்வைத்தது. குறிப்பாக ஆளுநருக்கு மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரமே இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது. மேலும், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடுவை நிர்ணயித்தும் தீர்ப்பளித்தது. இது அப்போது நாடு முழுக்க பேசப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
இது தொடர்பாக ஜனாதிபதி முர்மு 14 கேள்விகளைக் கொண்ட விளக்குறிப்பை அளித்திருந்தார். அந்த விளக்கக் குறிப்பு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று தொடர்ந்து.. மேற்கு வங்க அரசுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சட்டம் இயற்றும் அதிகாரம் என்பது இறையாண்மை கொண்டது என்றும் மசோதாவை நிறுத்தி வைப்பதன் மூலம் இதை நிர்வாகத் துறை கட்டுப்படுத்த முடியாது என்று வாதிட்டார். நிர்வாகத் துறைக்கு எந்த நிலையிலும் சட்டம் இயற்றும் அதிகாரம் கிடையாது என்றும் கபில் சிபல் வலியுறுத்தினார்.
குடியரசுத் தலைவருக்கும் அல்லது ஆளுநருக்கும் தனிப்பட்ட பவர்கள் இல்லை என்றும், அவர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் அமைச்சரவையின் உதவியுடனேயே செயல்படுகிறார்கள் என்றும் கபில் சிபல் தெரிவித்தார். ஒரு சட்டம் செல்லுபடியாகுமா இல்லையா என்பதை இறுதியில் உச்ச நீதிமன்றம் தான் தீர்மானிக்கும் என்றும் மசோதாக்களை நிறுத்தி வைப்பது அல்லது தாமதப்படுத்துவதன் மூலம் ஆளுநர்கள் அவற்றை கொலை செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
அதிகாரம் இல்லை
கபில் சிபல் மேலும், "மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க இயலாது. ஆளுநருக்கு இரண்டு முக்கிய வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று, மசோதாவைத் திருத்தங்கள் கோரி அல்லது மறுபரிசீலனை செய்யுமாறு சட்டமன்றத்திற்குத் திருப்பியனுப்பலாம். மற்றொன்று, மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம்.
விரைவாக செயல்பட வேண்டும்
மசோதாவைத் திருப்பியனுப்ப முடிவு செய்தால், அதை ஆளுநர் முடிந்தவரை விரைவாகச் செய்ய வேண்டும். இங்கு முடிந்தவரை விரைவாக என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது. மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் ஒரு மசோதாவை ஆளுநர் உடனடியாகப் பரிசீலிக்காமல் இருப்பதற்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது. உதாரணமாக, வீடற்ற குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ஒரு மசோதா ஆளுநரிடம் வந்தால், அதை அவர் நிறுத்திவைக்க எந்த முகாந்தரமும் இருக்காது. மக்களின் விருப்பத்தை ஆளுநர் மதிக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம்" என்றார்.
ஏற்க முடியாது
தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்க முடியாத ஒரு ஆளுநர், ஒரு மசோதாவை காலவரையின்றி நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கபில் சிபல் தெரிவித்தார். எனவே, ஆளுநர் ஒரு மசோதாவை முடிந்தவரை விரைவாக மசோதாவை சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், இங்கு 'குடியரசுத் தலைவர்' என்பது மத்திய அமைச்சரவையைக் குறிக்கிறது என்று அவர் விளக்கினார்.
ஆளுநர் ஏன் ஒரு மசோதாவை நீண்ட காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று சிபல் கேள்வி எழுப்பினார். அரசியலமைப்புச் சட்டம் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறும்போது, ஆளுநர் மசோதாக்களை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications