Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாரத்திற்கு ஒருமுறை டெல்லி போகிறாரே.. ஆளுநர் இதை செய்யட்டும்.. டக்கென சொன்ன முதல்வர்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: ஆளுநர் ரவி வாரத்துக்கு ஒருமுறை இரண்டு முறை டெல்லி சென்று விட்டு வருகிறார். அப்படி அவர் டெல்லி போகும்போது தயவு செய்து தமிழகத்திற்கு தேவையான நிதியை வாதாடி, போராடி பெற்று தந்தால் அவருக்கு நன்றி கடன் படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழை பெய்து மிரட்டியது. தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் இரு மாவட்டங்களும் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இன்று மழை வெள்ள பாதிப்பை நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Governor should get Flood Relief funds from Central Govt says TN Chief Minister MK Stalin

சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன அளவை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால், இரு மாவட்டங்களில் வரலாற்றில் இதுவரை பெய்யாத அளவுக்கு மழை பெய்துள்ளது. காயல்பட்டினம் பகுதியே வெள்ளக்காடானது. ஆளுநர் ரவி வாரத்துக்கு ஒருமுறை இரண்டு முறை டெல்லி சென்று விட்டு வருகிறார். அப்படி அவர் டெல்லி போகும்போது தயவு செய்து தமிழகத்திற்கு தேவையான நிதியை வாதாடி, போராடி பெற்று தந்தால் அவருக்கு நன்றி கடன் படுவோம்.

இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி எஸ்டிஆர்எப் என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு இந்த நிதி எவ்வளவு என்பதை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படும் இந்த நிதிக்குழு தீர்மானிக்கிறது. இதன்படி தமிழ்நாட்டின் எஸ்டிஆர்எப் என்ற நிதி ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 சதவீதத்தை 900 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும்.

மீதமுள்ள 25 சதவீத நிதியை அதாவது 300 கோடி ரூபாயை தமிழக அரசு ஏற்றிட வேண்டும். ஒன்றிய அரசின் நிதியானது இரண்டு தவணையாக நமக்கு அளிக்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு இருமுறை தலா ரூ.450 கோடி அளிக்கப்படும். ஒரு இயற்கை பேரிடரின் தாக்கம் கடுமையாக இருக்கும் போது இந்த எஸ்டிஆர்எப் நிதி போதவில்லை என்றால் அந்த இயற்கை பேரிடரை கடும் இயற்கை பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து எஸ்டிஆர்எப்-க்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தையும் தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தையும் இந்த கடும் பேரிடராக அறிவித்து எஸ்டிஆர்எப்க்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தான் நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். இதைத்தான் நானும் பிரதமரை நேரில் சந்தித்து பேசியபோது கூறினேன். மனுவாகவும் கொடுத்தேன். ஆனால் இன்று வரை இந்த இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை.

எஸ்டிஆர்எப்-ல் இருந்து இதுவரை கூடுதல் நிதி அறிவிக்கப்படவில்லை. ஒன்றிய அரசிடம் இருந்து நமக்கு வந்த ரூ.450 கோடி என்பது இந்த ஆண்டு எஸ்டிஆர்எப்க்கு வழங்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர கூடுதல் நிதி கிடையாது. மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி வராத இப்படிப்பட்ட சூழலில் கூட மக்களின் நலனை கருத்தில்கொண்டு, நிவாரண பணிகளை செய்து வருகிறோம்.

சென்னையில் நிவாரண உதவிகளை செய்தபோது 1,500 கோடி ரூபாய் கூதலாக செலவு செய்யப்பட்டுள்ளது. இன்று அறிவித்திருக்கூடிய நிவாரண உதவிகளுக்கும் ரூ.500 கோடிக்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போக சேதமடைந்த சாலை, பாலம், குடிநீர் திட்டங்கள், மருத்துவ கட்டிடங்கள் போன்றவற்றை சீரமைக்க பெரும் நிதி தேவைப்படும்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அரசு, சாலை, கட்டடங்கள், பாலங்களை சீரமைக்க உடனடி முன்பணமாக மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ. 280 கோடியை விடுவிக்க ஆணையிட்டுள்ளேன். மேலும் தாமதமின்றி இரண்டு பேரிடர்களையும் கடும் பேரிடராக அறிவித்து மத்திய அரசு என்டிஆர்எபில் இருந்து கோரப்பட்ட நிதியை நிதியை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பதை மீண்டும் மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+