33% இடஒதுக்கீடு! “பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியமான மைல்கல் இது..” தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு
டெல்லி: மகளிர் அமைப்பினர், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் நீண்ட கால கோரிக்கையான மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இன்று முதல் வரும் 22ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நிகழ்வுகள் அனைத்தும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாளான நாளை முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது.

முதல் நாள் கூட்டத் தொடர் முடிந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1996ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அரசியலமைப்பு சட்டத்தின் 81வது பிரிவில் திருத்தத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடம், பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று முதல் முறையாக மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தது.
ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் இந்த மசோதா தோல்வியடைந்தது. இதனையடுத்து இரண்டு முறை என 90களில் மொத்தம் 3 முறை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் தோல்வியடைந்தது. இதனையடுத்து இதே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு மீண்டும் இந்த மசோதாவை தாக்கல் செய்தது. மாநிலங்களவையில் இது நிறைவேற்றப்பட்ட நிலையில் மக்களவையில் தோல்வியடைந்தது.
சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் அப்போது இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த சூழலில் தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஏனென்றால் புதிய பாராளுமன்றத்தில் புதிய புரட்சி என்று இதை சொல்ல வேண்டும். இந்த மசோதா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உடனடியாக நாடாளுமன்றத்தில் மக்கள் அவையில் தாக்கல் செய்யப்படும். என்ன மசோதா நெடு நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழ்நிலை வரும்.
பெண்கள் அரசியலுக்கு வந்து ஆளுமையாக உருவெடுப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பது ஒரு பெண்ணாக எனக்கு தெரியும். பாஜகவை பொறுத்த அளவில் இந்த 33 சதவீத இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கு முன்னரே கட்சிக்குள் கொடுக்க தொடங்கி விட்டார்கள். எனவே எங்களைப் போன்ற பெண்கள் கட்சி நிர்வாகத்திற்கு வர வாய்ப்பு இருந்தது. இப்போது இந்த இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் ஆட்சி அதிகாரத்திலும் பெண்கள் அதிக அளவில் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த நடவடிக்கை பெண்கள் முன்னேற்றத்தில் மிக முக்கியமான மைல்கல்" என்று கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications