அமித் ஷா கட்டளையை நிறைவேற்றப்போகும் டாப் அதிகாரி.. மத்திய உள்துறை செயலராக கோவிந்த் மோகன் நியமனம்!
டெல்லி: மத்திய உள்துறை செயலராக கோவிந்த் மோகன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 22 அன்று முடிவடைந்ததும் அவருக்குப் பதிலாக மோகன் உள்துறை செயலராக செயல்படுவார். மோகன் தற்போது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளராக உள்ளார்.
மத்திய உள்துறை செயலராக உள்ள அஜய் குமார் பல்லா வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதியுடன் பணி நிறைவு பெறுகிறார். அஜய் பல்லாவின் பதவிகாலம் கடந்த ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. அந்த பதவி காலம் வரும் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து மத்திய கலாச்சாரத்துறை செயலராக இருக்கும் கோவிந்த் மோகன் உள்துறை சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை செயலராக கோவிந்த் மோகன் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டு, மத்திய அரசின் அமைச்சரவையின் நியமனக் குழுவால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த் மோகன், வாரணாசியில் மின்னணு துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். இவர் 1989 ஆம் ஆண்டு பேட்ச் சிக்கிம் மாநில ஐ.ஏ.எஸ் கேடர் அதிகாரி ஆவார். தற்போது மத்திய கலாச்சாரத்துறை செயலாளராக இருந்து வருகிறார்.
மத்திய அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ள கோவிந்த் மோகன், கடந்த 2019 ஆம் ஆண்டு உள்துறை செயலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் தற்போது மத்திய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், உள்துறை செயலராக கோவிந்த் மோகன் நியமிக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. பயங்கரவாதம், நக்சல்களை சமாளிப்பது மற்றும் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அமல்படுத்தும் பாஜக அரசின் வாக்குறுதிக்கு உதவுவது கோவிந்த் மோகனுக்கு முக்கிய சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications