டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பரவல் தீவிரம் : அரசு, தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி முகாம் நடத்த மத்திய அரசு அனுமதி

100 பணியாளர்கள் இருந்தால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தடுப்பூசிக்கு தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம் நடத்தலாம் வயது வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.28 கோடி பேரை தொட்டுள்ளது. தினசரியும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு போடப்பட்டு வருகிறது.

 Govt may soon organise Covid-19 vaccination sessions at workplaces

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 12,08,329 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 25,14,39,598 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது வரை 8,70,77,474 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக வீசத் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

தடுப்பூசிக்கு தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி முகாம் நடத்தலாம்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் ஏப்ரல் 11ம் தேதி முதல் தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த வயது வரம்பில் எவ்வித மாற்றமுமில்லை எனவும் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The government may allow Covid-19 vaccination sessions to be organised at workplaces both public and private in a bid to ramp up the ongoing vaccination drive in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X