திடீரென ஏறும் வைரஸ் கேஸ்கள்! குழந்தைகளுக்கு வேக்சின் பணிகள்.. மத்திய அரசின் மிக முக்கிய முடிவு
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், 5-12 வயது உடையவர்களுக்கு கொரோனா வேக்சின் செலுத்துவது தொடர்பாக முக்கிய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்த நிலையில், தினசரி கேஸ்களும் லட்சத்தை தாண்டியது.
இருப்பினும், நல்வாய்ப்பாக டெல்டா கொரோனாவை போல ஓமிக்ரான் தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும், இந்த ஓமிக்ரான் லேசான பாதிப்பையே ஏற்படுத்தியது.

ஓமிக்ரான்
மேலும், ஓமிக்ரான் அலை நாட்டில் வெகு சீக்கிரம் கட்டுக்குள் வந்துவிட்டது. ஓரிரு வாரங்களிலேயே நாட்டில் வைரஸ் பாதிப்பு குறைந்து, மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது ஒரு காரணம் என்றால், தீவிரமாக நடைபெற்று வந்த வேக்சின் பணிகள் மற்றொரு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. இரு டோஸ் வேக்சினுக்கு பின்னர், இப்போது 3ஆவது முன்னெச்சரிக்கை டோஸ் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளது.

சிறார் வேக்சின்
அதேபோல சிறார்களுக்கு வேக்சின் செலுத்துவது தொடர்பாகவும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் 15-18 வயதானவர்களுக்கு வேக்சின் செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் 12-14 வயதானவர்களுக்கும் வேக்சின் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே 5-12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பயாலஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் வேக்சின் பயன்படுத்த வல்லுநர் குழு பரிந்துரை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

12-14 வயதினர்
தற்போது வரை கிடைத்துள்ள தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த முடிவை வல்லுநர் குழு எடுத்துள்ளது. வல்லுநர் குழு அளித்த இந்த பரிந்துரையை இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருந்துக் கட்டுப்பாட்டாளர் அமைப்பு ஒப்புதல் அளித்த பின்னர், இதில் மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி அனுமதியைக் கொடுக்கும். இப்போது இதே கோர்பேவாக்ஸ் தான் 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

சிறார்களுக்கான வேக்சின்
இந்தியாவில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு கொரோனா வேக்சின்கள் வழங்கப்பட்டு வருகிறது. 15-18 வயதான குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல 12-14 வயதானவர்களுக்கு இந்த கோர்பேவாக்ஸ் வேக்சின் போடப்பட்டு வருகிறது. இந்த கோர்பேவாக்ஸ் வேக்சினை 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக அளிக்கப்பட வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications