ஹேப்பி நியூஸ்... அடுத்து இந்த வயதுள்ளவர்களும்... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியும்
டெல்லி: இந்தியாவில் அடுத்தகட்டமாக 50 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஜனவரி மாதம் தொடக்கத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், நாட்டிலுள்ள 120 கோடி மக்களுக்கும் உடனடியாக தடுப்பூசி செலுத்த முடியாது என்பதால் இந்த பணிகளை ஐந்து கட்டங்களாகப் பிரித்து நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி முதல்கட்டமாக ஒரு கோடி சுகாதார ஊழியர்கள் உட்பட மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்குக் கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் அடுத்தகட்டம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி அடுத்தகட்டமாக 50 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது அதிலும்கூட முதலில் மற்ற உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் சில வாரங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். இருப்பினும், மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர், தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்தது. அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தனியார் துறையை அனுமதித்ததும், பணிகள் வேகமெடுக்க முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
