டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

31,000 கோடி நிதி .. 3.5 கோடி கட்டடத் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான 31,000 கோடி நிதியை பயன்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது இதன் மூலம் 3.5 கோடி தொழிலாளர்கள் பயனடைய வாய்ப்பு உள்ளது.

Recommended Video

    பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் வேகமாக பரவி வருவது ஒருபுறம் என்றால், மறுபுறம் 21 நாட்கள் ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    Govts to use fund Rs31,000 crore fund for construction workers: nirmala Sitharaman

    அன்றாட கூலித்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகிறார்கள். சிறு வியாபாரிகள் கடைகள் வைக்க முடியாமலும், ஆட்டோ, கார் ஓட்டிகள் வாகனத்தை இயக்கி வருமானம் ஈட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.

    கட்டிடங்கள் கட்ட அரசு 21 நாட்களுக்கு தடை விதித்துள்ளதால் கட்டிட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட கூலித்தொழிலாளர்களான இவர்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்கு சென்றால் அன்றைக்கு சோறு என்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஊரடங்கால் வேலையும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் முடங்கி போய் உள்ளனர்.

    இவர்களுக்கு மத்திய அரசு ஏதேனும் உதவிகளை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், கட்டிடத் தொழிலாளர்களுக்கான சேமநல நிதியாக 31,000 கோடி நிதியை பயன்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த நிதியினை அரசுகள் பயன்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் பதிவு செய்துள்ள 3.5 கோடி கட்டடத் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

    English summary
    Welfare for building and construction workers, registered 3.5 crore workers to be benefited, Central Govt has given orders to State Govts to use fund (Rs31,000 crore) to provide relief, announces FM Sitharaman
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X