டெல்லியில் அமலுக்கு வந்தது ‘கிராப் 4’.. காற்று மாசு அபாய கட்டத்தில் உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள்!
டெல்லி: டெல்லி என்சிஆர் பகுதியில் மிக மோசமான காற்றின் தரம் காரணமாக மத்திய அரசு மிகக் கடுமையான அவசர நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. டெல்லியிலும், குருகிராம், ஃபரிதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத்த நகர் மாவட்டங்களிலும் பிஎஸ்-III பெட்ரோல் மற்றும் பிஎஸ்-IV டீசல் நான்கு சக்கர வாகனங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் காற்று மாசு வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால் சுவாசிப்பதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அதிக காற்று மாசை ஏற்படுத்தும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, அண்மையில் டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட, பிஎஸ் 6 விதிமுறைகளை பின்பற்றாத கனரக சரக்கு வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கிராப் 4 நிலை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிஎஸ்-III பெட்ரோல் மற்றும் பிஎஸ்-IV டீசல் நான்கு சக்கர வாகனங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் டெல்லி போக்குவரத்து போலீசார் உடன் சிறப்பு குழுவினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். 90 சதவீத வாகனங்கள் டெல்லிக்குள் வர பயன்படுத்தும் 23 முக்கிய பகுதிகளில் இந்த குழு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.
டெல்லியின் காற்று ஒவ்வொரு மணி நேரமும் மோசமடைந்து வருவதை நிகழ்நேர தரவுகள் காட்டுவதால், காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) ஒரு அதிரடி முடிவை எடுத்தது. சனிக்கிழமை மாலை முழுவதும் காற்றின் தரத்தில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது. டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மாலை 4 மணியளவில் 431 ஆக இருந்து மாலை 6 மணியளவில் 441 ஆக உயர்ந்தது.
டிசம்பர் 14 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், மாசு அளவுகள் கடுமையான வரம்பை மீறி, CPCB தரவுகளின்படி AQI 460 ஆக இருந்தது. மோசமடைந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில், மிக உயர்ந்த அளவிலான கட்டுப்பாடுகளான கிராப் நிலை-IV நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது.
GRAP-IV இன் கீழ் மிக முக்கியமான நடவடிக்கையாக டெல்லி முழுவதும் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் கல் நொறுக்கிகள், சுரங்க செயல்பாடுகள் நிறுத்தப்படுகிறது.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. NCR முழுவதும் உள்ள மாநில அரசுகள் மற்றும் டெல்லி அரசாங்கம் BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் நான்கு சக்கர வாகனங்களின் இயக்கத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் டெல்லியில் மட்டுமல்லாமல், குருகிராம், ஃபரிதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத்த நகர் உள்ளிட்ட முக்கிய அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் பொருந்தும்.
அரசு அலுவலகங்கள் 50 சதவீத திறனில் இயங்கவும், மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். வாகன இயக்கத்தைக் குறைப்பதற்கு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் பிரிவு 5 இன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு ஹைபிரிட் முறைகளுக்கு மாற கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளம் சிறார்கள் ஆபத்தான காற்றை சுவாசிப்பதை குறைக்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளின் ஹைபிரிட் முறை மூலம் கல்வி பயிற்றுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications