GST-யில் பெரிய மாற்றம்.. எந்தெந்த பொருட்கள் விலை குறையும்? எந்த பொருட்கள் விலை உயரும்? முழு லிஸ்ட்
டெல்லி: டெல்லியில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 10 மணி வரை நடந்தது. அதன்பிறகு ஜிஎஸ்டி வரி அடுக்கில் மாற்றம் கொண்டு வருவது பற்றியும், மக்களின் அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு இரவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்நிலையில் தான் எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? எந்தெந்த பொருட்களின் விலை உயரும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக ஜிஎஸ்டி அமலில் உள்ளது. இந்நிலையில்தான் கடந்த சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது நாட்டில் ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பரிசு உள்ளதாக கூறினார். இது ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதாவது தற்போது ஜிஎஸ்டி 4 அடுக்குகளாக உள்ளன. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்று ஜிஎஸ்டி வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 அடுக்குகளை நீக்கிவிட்டு பொருட்களின் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என்று சொல்லப்பட்டது. இதற்கிடையே தான் டெல்லியில் இன்று 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது.
12% - 28% சதவீத வரி நீக்கம்
மத்திய நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி உள்ள இந்த கூட்டம் நாளை வரை நடைபெற உள்ளது. மாநில நிதியமைச்சர்கள், யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 10 மணிக்கு முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் ஜிஎஸ்டியில் 12 சதவீதம், 28 சதவீதம் என்ற இரு வரிகள் நீக்கப்பட்டுள்ளது.
இந்த ஜிஎஸ்டி மீட்டிங் இரவு 10 மணியளவில் முடிவடைந்தது. அதன்பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது? எந்தெந்த பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது? என்பது பற்றி விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
தினசரி பயன்பாட்டு பொருட்கள்
மக்களின் தினசரி பயன்பாட்டு பொருட்களான தலைக்கு பயன்படுத்தும் எண்ணெய், ஷாம்பு, டூத்பேஸ்ட், கழிவறை சோப்பு, பல் தேய்க்கும் பிரஷ், சேவிங் க்ரிம் உள்ளிட்டவற்றின் மீதான 18 சதவீத வரி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால் பொருட்கள், பால் டப்பாக்கம், குழந்தைகளுக்கான நாப்கின்கள், Diapers, தையல் மெஷின் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
ஹெல்த்கேர் துறை
காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக இருந்தது. அதற்கு இனி ஜிஎஸ்டி வரி கிடையாது. அதேபோல் 18 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்த தெர்மோமீட்டர், 12 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்த மெடிக்கல் கிரேட் ஆக்சிஜன், அனைத்து சிகிச்சைஉபகரணங்கள், குளுக்கோமீட்டர் உள்ளிட்டவற்றின் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை
கல்வி துறையை எடுத்து கொண்டால் மேப், சார்ட்ஸ், பென்சில், ஷார்பபென்னர்ஸ், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக்கப்படுகிறது. அதேபோல் பயிற்சி புத்கம், நோட் புத்தகம் உள்ளிட்டவற்றின் 12 சதவீத அழிப்பான் (Erasers) உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறை
டிராக்டர் டயர்ஸ் மற்றும் அதன் உதிரி பாகங்கள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக்கப்பட்டுள்ளது. டிராக்டர்கள், பயோ உரங்கள் மற்றும் நுண் ஊட்ட பொருட்கள் மீதான வ, டிரிப் நீர் சிஸ்டம், ஸ்பிரிங்கிளர்ஸ், மண்ணை தயார் படுத்தும் தோட்டக்கலை, விவசாயம் சார்ந்த மெஷின்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் துறை
1200 சிசி மற்றும் 4000 மில்லிமீட்டருக்கு உட்பட்ட பெட்ரோல், பெட்ரோல் ஹைப்ரிட், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள், டீசல், 1,500 சிசிக்கு குறைவான டீசல் ஹைப்ரிட் கார்கள், 3 சக்கர வாகனங்கள், 350 சிசிக்கு குறைவான மோட்டார் சைக்கிள், சரக்குகளுக்கான மோட்டார் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்
ஏசி, டிவி, மானிட்டர், புரோஜெக்டர்ஸ், டிஷ் வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இதனால் இந்த பொருட்களின் விலை அதிரடியாக குறைய உள்ளது .
விலை உயரும் பொருட்கள்
* புகையிலை பொருட்களான பான் மசாலா, குட்கா, சிகரெட், ஜர்தா உள்ளிட்ட சுவிங் புகையிலை பொருட்கள், பீடி Scented புகையிலை பொருட்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பொருட்களின் விலை அதிகரிக்கும்.
* அதேபோல் ஆடம்பரமான கார்கள், வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், Dutiable தனிப்பட்ட பயன்பாட்டுக்கான கார் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
* 1200cc க்கும் அதிகமான பெட்ரோல் இன்ஜினக்களின் மற்றும் 1500cc டீசல் இன்ஜின்கள் கொண்ட சொகுசு மற்றும் பிரீமியம் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* சர்க்கரை மற்றும் சுவையூட்டப்பட்ட குளிர்பாகனங்களுக்கானங்கான வரியும் 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பொருட்களின் விலை உயர உள்ளது.
* இந்த புதிய ஜிஎஸ்டி வரி நடைமுறை செப்டம்பர் 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications