ஜிஎஸ்டி மாற்றம்..2 லட்சம் கோடி எங்களுக்குத் தான் இழப்பு! எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ காப்பீடு ஆகியவை எளிய மக்களுக்கும் வரியின்றி கிடைக்கும். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பீடி, சிகரெட் ஆகியவற்றுக்கான வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் புதிய ஜிஎஸ்டி மாற்றங்களால் தங்களுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாகவே, அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் குறைப்பு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

பிரதமர் மோடி சுதந்திர தின உரையிலேயே, "ஜிஎஸ்டி குறைப்பே மக்களுக்கு தீபாவளி பரிசு" என அறிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பின் படி, அத்தியாவசிய தினசரி பொருட்களுக்கு 18% மற்றும் 12% ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டு மட்டும் 5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பயன்பெறும் வகையில் பல பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

GST Revamp

ஜிஎஸ்டி மாற்றம்

தேங்காய் எண்ணெய், சோப்புகள், ஷாம்புகள், பற்பசைகள், சமையலறைப் பொருட்கள், மேஜைப் பொருட்கள், நூடுல்ஸ், பாஸ்தா, ரொட்டிகள், சைக்கிள்கள், ஆகியவற்றுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, வெண்ணெய், நெய், சீஸ், பால் பொருட்கள், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட நாப்கீன்கள், மிக்சர், பாத்திரங்கள், குழந்தைகளுக்கு உணவளிக்கும் பாட்டில்கள், டயப்பர்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் அதன் பாகங்கள் ஆகியவற்றுக்கும் 5% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும்.

விலை குறையும் பொருட்கள்

விவசாயிகளுக்குப் பெரும் நன்மை தரும் வகையில், டிராக்டர்கள், அதன் டயர்கள் மற்றும் பாகங்கள், குறிப்பிட்ட உயிரி-பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்டச்சத்துக்கள், சொட்டு நீர்ப்பாசன அமைப்பு, தெளிப்பான்கள், சாகுபடி மற்றும் அறுவடை இயந்திரங்களுக்கும் முன்னர் 12-18% இருந்த ஜிஎஸ்டி, 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதோடு, ஏர் கண்டிஷனர்கள், 32 அங்குலத்துக்கு மேல் எல்.இ.டி மற்றும் எல்.சி.டி டிவிகள், மானிட்டர்கள், ப்ரொஜெக்டர்கள், டிஷ் வாஷிங் மெஷின்கள் ஆகியவற்றிற்கான ஜிஎஸ்டியும் 28%ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்

இந்த ஜிஎஸ்டி விகித மாற்றங்களால், சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும். குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும் என்று நிதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய எட்டு மாநிலங்களும், புதிய GST சீரமைப்பால் ரூ.1.5 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளன.

எஸ்பிஐ ரிசர்ச்

ஆனால் எஸ்பிஐ ரிசர்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களுக்கு 2025-26 நிதியாண்டில் மட்டும் ஜிஎஸ்டியிலிருந்து ரூ.10 லட்சம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்றும், கூடுதலாக மத்திய அரசின் வரிவருவாய் பகிர்விலிருந்து ரூ.4.1 லட்சம் கோடி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் இழப்பின் தாக்கம் குறையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜிஎஸ்டி வசூல்

2017-ல் ஜிஎஸ்டி அறிமுகமான போது சராசரி வரி விகிதம் 14.4% ஆக இருந்தது. 2019-ல் அது 11.6% ஆக குறைந்தது. தற்போது அது சுமார் 9.5% வரை குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரம்பத்தில் வசூல் குறையலாம் என்றாலும், முன் அனுபவங்கள் காட்டும் வகையில் சில மாதங்களில் வசூல் மீண்டும் உயரும். முன்பு நடைபெற்ற மாற்றங்களுக்குப் பிறகு, ஜிஎஸ்டி வசூல் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+