அடேங்கப்பா! மார்ச் மாத ஜி.எஸ்.டி வசூல் கிடு கிடுவென அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா?
டெல்லி: மார்ச் மாத மொத்த் ஜி.எஸ்.டி வருவாய் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடியாகும். சிஜிஎஸ்.டி 29 ஆயிரத்து 546 கோடியும், எஸ்ஜிஎஸ்டி ரூ.37 ஆயிரத்து 314 கோடியுமாக உள்ளது. ஐஜிஎஸ்.டி 82 ஆயிரத்து 907 கோடியாகும். செஸ் வரியாக 10,355 கோடியும் வருவாய் வந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி வருவாய் 1.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டுவது இது நான்காவது முறையாகும்.
நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளால் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது. கலால் வரி, கூடுதல் சுங்க வரி, சேவை வரி, வாட் வாரி உள்பட பல்வேறு விதமான வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட வரியாக சரக்கு மற்றும் சேவை வரி உள்ளது.

ஒரே இந்தியா, ஒரே வரி
ஒரே இந்தியா, ஒரே வரி என்னும் அடிப்படையில் இந்த வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு மத்திய ஜி.எஸ்.டி. (CGST) மத்திய அரசாலும், மாநில ஜி.எஸ்.டி. (SGST) மாநில அரசினாலும் விதிக்கப்படுகிறது. இந்த வரி வருவாயை மத்திய மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. அதேபோல் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

1.60 லட்சம் கோடி
ஜிஎஸ்டியை பொறுத்தவரையில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் ஆகிய 4 சிலாப்களில் வரி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதம் ஜி.எஸ்.டி வரி முறையில் வசூலான தொகை விவரத்தை மத்திய அரசு பகிர்ந்து வருவது வாடிக்கையாகும். அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்திற்கான வரி வசூல் விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் மாத வரி 1.60 லட்சம் கோடியாக உள்ளது.

13 சதவிகிதம் அதிகம்
இது முந்தைய ஆண்டை விட 13 சதவிகிதம் ஆகும். அதுபோக இதுவரை வசூல் செய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச தொகை இதுவேயாகும். இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- மார்ச் மாத மொத்த் ஜி.எஸ்.டி வருவாய் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடியாகும். சிஜிஎஸ்.டி 29 ஆயிரத்து 546 கோடியும், எஸ்ஜிஎஸ்டி ரூ.37 ஆயிரத்து 314 கோடியுமாக உள்ளது.

இது 4-வது முறை
ஐஜிஎஸ்.டி 82 ஆயிரத்து 907 கோடியாகும். செஸ் வரியாக 10,355 கோடியும் வருவாய் வந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி வருவாய் 1.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டுவது இது நான்காவது முறையாகும். அதேபோல் இந்த வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு வசூல் செய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச தொகையாக மார்ச் மாத வசூல் பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications