Union Budget 2022: ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
டெல்லி: ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை உருவாக்குவது குறித்த அறிவிப்பு பொது பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கலாகிறது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் தீர்ப்பாயங்களில் வழங்கப்படும் முரண்பாடான உத்தரவுகளுக்கு சமரச தீர்வு காணும் வகையில் மேல்முறையீடு செய்வதற்காக தேசிய அமர்வை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்படி தேசிய ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை தொடங்குவதற்கு கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சில தொழில்நுட்ப கோளாறுகள் செய்யப்பட்டு வந்தது.
Recommended Video
தேசிய ஜிஎஸ்டி மேலமுறையீட்டு தீர்ப்பாயம் டெல்லியில் அமையும் என்றும் அதற்கு ஒரு தலைவர், மத்திய அரசை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப உறுப்பினர், மாநில அரசை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப உறுப்பினரை கொண்டு இயங்கும் என்றும் தெரிவித்திருந்தது. ஜிஎஸ்டி அதிகாரிகள் வரி செலுத்துமாறு அவ்வப்போது அழுத்தம் கொடுப்பதாக அரசுக்கு புகார் எழுந்துள்ளது. முரண்பட்ட வரிகளால் பாதிக்கப்படுவோர் தீர்ப்பாயம் இல்லாததால் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்வதற்கு அதிகம் செலவிட வேண்டியிருப்பதால் ரிட் மனு தாக்கல் செய்ய முடியவில்லை. மேலும் ஜிஎஸ்டி குறித்த வழக்குகள் அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் நீதிமன்றங்களும் ஜிஎஸ்டி குறித்து ரிட் மனுக்களை பெறுவதிலிருந்து விலகியே உள்ளன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications