மிக முக்கியமானது.. தனிமைப்படுத்துதல் யார் யாருக்கு அவசியம், எத்தனை நாட்கள், எப்படி இருக்க வேண்டும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 149 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

அப்படி தனிமைப்படுத்தப்பட்டால் தான் கொரோனாவால் ஒருவேளை அவர் பாதிக்ககப்பட்டிருந்தால் மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படும். இதேபோல் கொரானா வைரஸில் இருந்து தப்பிக்கவும் தனிமைப்படுத்தல் மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது.

சரி தனிமைப்படுத்ததல் என்றால் என்ன, யார் யார் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான சுற்றுச்சூழல்களாக அரசு வகுத்துள்ள கூறுகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள்

தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள்

முதலில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் ஒரே வீட்டில் உள்ளவர். அவருடன் கழிவறை, குளியல் அறை, ஒரே படுக்கை அறை, உணவு அறை உள்ளிட்டவற்றை பயன்படுத்துபவர்கள். அடுத்தததாக கொரானாவால் பாதிக்கப்பட்டவரை தொட்டவர். அவருடன் நெருக்கமாக நின்று பேசியவர்கள். இதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருடன் ஒரு மீட்டருக்கும் குறைவான தூரம் அமர்ந்து பயணம் (விமானம் உள்பட) செய்தவர்கள் உள்ளிட்டவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

தனிமையில் எப்படி இருக்கணும்

தனிமையில் எப்படி இருக்கணும்

இணைக்கப்பட்ட அல்லது தனி கழிப்பறைடன் நன்கு காற்றோட்டமான ஒற்றை அறையில் தங்க வேண்டும். மற்றொரு குடும்ப உறுப்பினர் ஒரே அறையில் தங்க வேண்டியிருந்தால், குறைந்தது ஒரு மீட்டர் முதல் 2 மீட்டர் இடைவெளியை பராமரிப்பது நல்லது. வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீட்டுக்குள் நோயுற்ற நபர்கள் ஆகியோரிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

வெளியே வரவே கூடாது

வெளியே வரவே கூடாது

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சந்தேகத்திற்கு உரியவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. திருமணம், துக்கம், கோயில் விழா, ஊர் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேறபது. பேருந்துகளில் பயணிப்பது, கூட்டமான இடங்களில் பயணிப்பது உள்ளிட்ட எந்த ஒரு செயலையும் எக்காரணம் கொண்டு செய்யக்கூடாது. அவர் வீட்டை விட்டே வரக்கூடாது.

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அடிக்கடி கையை சோப்பு மற்றும் தண்ணீரில் அல்லது ஆல்கஹால் சார்ந்த கையால் அடிக்கடி கழுவ வேண்டும். வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் பொருட்களைப் பகிர்வதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக உணவுகள், குடிக்கும் கண்ணாடி, கப், சாப்பிடும் பாத்திரங்கள்,
துண்டுகள், படுக்கை அல்லது பிற பொருட்களை வீட்டில் உள்ளவர்களுடன் எக்காரணம் கொண்டும் பகிர கூடாது

முகமூடி எவ்வளவு நேரம்

முகமூடி எவ்வளவு நேரம்

அனைத்து நேரமும் ஒரு அறுவை சிகிச்சை முகமூடியை அணிய வேண்டும். ஒவ்வொரு 6-8 மணி நேரத்திற்கும் முகமூடியை மாற்ற வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய முகமூடிகளை ஒருபோதும் மீண்டும் பயன்படுத்தப்படாது. இந்த முகமூடிகளை சாதாரண ப்ளீச் கரைசல் (5%) அல்லது சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலை (1%) பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். பின்னர் அதை எரித்துவிட வேண்டும் அல்லது ஆழமான குழி தோண்டி புதைத்துவிட வேண்டும். ஏனெனில் பயன்படுத்தப்பட்ட முகமூடி தொற்றுநோயை பரப்பும் அபாயம் கொண்டவை ஆகும்.

காய்ச்சல் இருமல்

காய்ச்சல் இருமல்

கொரோனா வைரஸ்காக தனிமைப்படுத்துதலின் போது அறிகுறிகள் தோன்றினால் (இருமல் / காய்ச்சல் / சுவாசிப்பதில் சிரமம்), அவர்கள் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு தெரிவிக்க வேண்டும். அல்லது 011-23978046 ஐ அழைக்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள்

குடும்ப உறுப்பினர்கள்

தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் குடும்பத்தினர் செய்ய வேண்டியவை. ஒரு குடும்ப உறுப்பினரை மட்டுமே தனிமைப்படுத்துலில் உள்ளவவை கவனித்துக்கொள்ளும் பணியை செய்ய வேண்டும். அவரது அழுக்கடைந்த துணியை தொடக்கூடாது. அத்துடன் அவரை எந்த வகையிலும் நேரடியாக தொட்டுவிடக்கூடாது. அவரது அறையை சுத்தம் செய்யும் போது அல்லது அழுக்கடைந்த துணியைக் கையாளும் போது கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும். கையுறைகளை அகற்றிய பின் கைகளைக் கழுவ வேண்டும். யாரையும் பார்க்க அனுமதிக்கக்கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு கொரோனா அறிகுறி உறுதியாகிவிட்டால் அனைவரும் கட்டாயமாக 14 நாட்கள் தள்ளியே இருக்க வேண்டும் . அல்லது இன்னும் கூடுதல் 14 நாட்கள் அதாவது 28 நாட்கள் தள்ளியே (நெகட்டிவ் என சோதனை முடிவில் வரும் வரை) இருக்க வேண்டும்.

துணிகளை துவைத்தல்

துணிகளை துவைத்தல்

தனிமைப்படுத்தப்பட்ட நபரின் அறையில் அடிக்கடி மேற்பரப்புகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். உதாரணமாக படுக்கை பிரேம்கள், தினசரி 1% சோடியம் ஹைபோகுளோரைடை பயன்படுத்தி செய் வேண்டும். வழக்கமான வீட்டு பினாயில் கரைசல் / பினோலிக் மூலம் தினமும் கழிப்பறை மேற்பரப்புகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். பொதுவான வீட்டைப் பயன்படுத்தி நபர் பயன்படுத்தும் துணிகளையும் பிற துணியையும் தனித்தனியாக துவைக்க வேண்டாம்

தனிமைப்படுத்துதல்

தனிமைப்படுத்துதல்

வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட காலம் என்பது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்டவர் என்பதை உறுதி செய்ததில் இருந்து 14 நாட்கள் இருக்கவேண்டும். அல்லது குறிப்பிட்ட நபருக்கு ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் இல்லை என்பது தெரியும் வரை தனிமையில் இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+