பிகே போட்ட பக்கா பிளான்! பிரசாந்த் கிஷோரை சந்தித்த ‘படிதார்’ சமூக தலைவர்! குஜராத் பாஜகவுக்கு செக்?
டெல்லி : காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக எதிர்பார்பு எழுந்துள்ள்ள நிலையில் குஜராத்தின் ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளையின் தலைவர் நரேஷ் படேல், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியுள்ள குஜராத் அரசியலில் பரபரப்பை கூட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 உறுப்பினர்களைக் கொண்ட
சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
தேர்தலில் முக்கிய சக்தியாக திகழும் படிதார் சமூகத்தின் பிரிவான லியுவா பட்டேல் சமூகத்தினை கவர அனைத்து கட்சிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சமூகத்தின் செல்வாக்கு மிக்க நபராக நரேஷ் பட்டேல் உள்ளார்.

படேல் சமூகம்
குஜராத்தில் பட்டேல் சமூகத்தின் வாக்குகள் மிகவும் செல்வாக்குமிக்கதாகக் கருதப்படுகிறது. குஜராத்தின் மக்கள்தொகையில் 11-12 சதவீதம் பேர் பாடிதர்கள் தான். அவர்களின் வாக்குகள் பல தொகுதிகளில் முடிவுகளை மாற்றும்.மேலும் பல தொகுதிகளில் வேட்பாளர்களின் தலைவிதி, அந்தச் சமூகம் யாருக்கு எப்படி வாக்களிக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமூகத்தின் முக்கிய பிரமுகரான நரேஷ் படேல், படேல் சமூகத்தால் மதிக்கப்படும் மா கொடியார் கோவிலை நிர்வாகம் செய்யும் ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.

நரேஷ் பட்டேல்
இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் தலைவர்கள் கடந்த சில மாதங்களாக நரேஷ் படேலைக் கவர முயன்று வருகின்றன. ஆனால் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் தலைமையுடன் நரேஷ் படேல் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். 201ஆம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் நல்ல எண்ணிக்கையில் வெற்றி பெற பாடிதார்கள் உதவினார்கள் எனவும், இப்போது அதே படிதார்களையும், கோடல்தாம் அறக்கட்டளையின் தலைவர் நரேஷ் படேலையும் காங்கிரஸ் அவமதிக்கிறது எனக் அச்சமூக மக்களிடையே ஒரு கருத்து உள்ளது.

பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு
தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குஜராத் படிதார் தலைவர் நரேஷ் படேல், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரை டெல்லியில் சந்தித்ததாக கூறியுள்ளார். ஆனாலும் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எந்தக் கட்சியில் சேரலாம் என்பதை இன்னும் இறுதி செய்யவில்லை என்றும் நரேஷ் படேல் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பரபரப்பு
ஸ்ரீ கோடல்தாம் கோயில் அறக்கட்டளையின் தலைவர் நரேஷ் படேல் அறக்கட்டளையில் உள்ள கருத்துக் கணிப்பு ஒன்றினை நடத்தி, மக்கள் அளிக்கும் முடிவுன் அடிப்படையில் எந்த அரசியல் கட்சியில் சேருவது என்பது குறித்து இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸில் சேர வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு பதிலளித்த நரேஷ் படேல், இந்த முடிவு மிகவும் முக்கியமானது இதுவரை நான் எந்த உறுதியான முடிவையும் எடுக்கவில்லை, ஏப்ரல் 25 திங்கட்கிழமை கூட்டத்தை நடத்த இருப்பதாகவும், அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய 3 கட்சிகளின்தலைவர்கள் தன்னை சந்தித்ததாகவும், கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications